எங்களைப்பற்றி

எங்களைப்பற்றி

இந்தியாவிலேயே தஞ்சாவூரில், பக்கவாதம் மற்றும் நரம்பியல் சிறப்பு முன்னனி மருத்துவமனை

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை ஒரு புகழ்பெற்ற சிறப்பு நரம்பியல் மருத்துவமனையாகும். அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ள மருத்துவ குழுவினர், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் தமிழ்நாட்டிலே தஞ்சாவூரில் சிறந்த நரம்பியல் மருத்துவரான மருத்துவர் வாஞ்சிலிங்கம் அவர்களின் சீரிய தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தடையில்லா தொலைநோக்கு சிந்தனை மற்றும் முடிவில்லா முழு ஈடுபாட்டுடன் சிறப்பான மற்றும் எளிதில் பெறக்கூடிய சுகாதார வசதிகளை இந்த மாவட்டத்தை சுற்றியுள்ள மக்களுக்கு வழங்கிவருகிறது. எங்களின் நிறுவனர் மருத்துவர் வாஞ்சிலிங்கம், 1996ம் ஆண்டு, தஞ்சாவூரில் கார்த்திக் ஸ்கேன் மையத்தை துவக்கினார். நோயாளிகளுக்கு புதிய நோய் கண்டறியும் வசதிகளை வழங்குவதற்காக துவக்கினார்.

அங்கு துவங்கி, மையம், கடந்த 20 ஆண்டுகளில்  இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளித்து, தற்போது சிறந்த, புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. அதற்கு இங்குள்ள மருத்துவர்களின் அர்ப்பணிப்பே காரணமாகும். 

துவங்கியது முதலே டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை, தொடர்ந்து நோய் அறிகுறிகளை கண்டறிந்து நோயாளிகளை கவனித்துக்கொள்வது, பொதுவான மற்றும் சிக்கலான நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பது போன்ற பல்வேறு நிலைகளில் தரமான மருத்துவமனையாகவும், அதன் பெயரை ஆரம்பத்திலிருந்தே தக்கவைத்து வந்துள்ளது. மேலும், நாங்கள் நோயாளி வந்த 24 மணி நேரத்திற்குள், அறிகுறிகள் மற்றும் பரிசோதனைகளை வைத்து நோயை முழுமையாக கண்டறிந்து, சிகிச்சையை துவக்கிவிடுகிறோம். அனைத்தையும் ஒரே கூரின் கீழ் செய்து முடிப்பதும் எங்களின் கூடுதல் சிறப்பாகும்.

எங்கள் நிறுவனர் டாக்டர் வாஞ்சிலிங்கம், இந்த மருத்துவமனையை தொழில்நுட்ப வசதிகள் நிறைந்ததாக வடிவமைத்தார். அதுதான் நோய் கண்டறியும் வேகம், துல்லியம் ஆகியவற்றை அதிகரித்து, எங்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கு வழிவகுக்கிறது.

தற்போது வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் 50 படுக்கைகள் உள்ளன. அவசர சிகிச்சைப்பிரிவில் 16 படுக்கைகள் உள்ளன. பக்கவாதம் மற்றும் நரம்பியல் சிறப்பு சிகிச்சையளிப்பதற்கு இது உதவுகிறது. மாவட்டத்திலேயே எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி மற்றும் கேத்லேப் உள்ள ஒரே மருத்துவமனையாக எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை திகழ்கிறது.

எங்களின் தரமான சிகிச்சை முறைகள் மற்றும் எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவையே நாங்கள் வெற்றியடைய உதவியது. எங்களின் ஊழியர்கள் திறமை வாய்ந்த பணியாளர்கள் மட்டுமல்ல, எங்கள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை வசதிகளையும், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு போதிய ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்பவர்கள். நாங்கள் எங்கள் குழுவினரின் அர்ப்பணிப்பு மூலம் பெறும் வெற்றிகள் குறித்து பெருமை கொள்கிறோம். மேலும் வெற்றியடைவதற்கு முயற்சியும் செய்து வருகிறோம்.

அனுபவம் பேசுகிறது  

 • 1996 ம் ஆண்டு நிறுவப்பட்ட எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை, 20 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்கும் வசதியைப் பெற்றுள்ளது.
 • இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எங்கள் மருத்துவமனையில் தரமான, சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
 • நாங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அவசரசிகிச்சை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தினமும் சிகிச்சையளித்து வருகிறோம். குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 3 முதல் 4 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற சில சிறப்பான காரணங்களால் நாங்கள், மாநிலத்திலேயே சிறந்த சிகிச்சை வழங்குவதில் தலைசிறந்த மருத்துவமனையாக திகழ்கிறோம்.

 • நரம்பியல் அவசரசிகிச்சை பிரிவு வசதி ஏற்படுத்தியதில் தென் மாவட்டங்களிலேயே நாங்கள் முதல் மருத்துவமனையாக உள்ளோம்.
 • தென் தமிழ்நாட்டிலே முதல் நரம்பியல் சிறப்பு மருத்துவமனை எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை.
 • கேத்லேப் வசதியில் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது. இங்கு ஒரு சில மருத்துவமனைகளிலே இவ்வசதி உள்ளது.
 • மாவட்டத்திலேயே ஐவி திரோம்போலிசிஸ் மற்றும் ஐஏ திரோம்போலிசிஸ் போன்ற சிகிச்சை முறைகளை முதலில் செய்தது எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை.
 • மாவட்டத்திலேயே மெக்கானிக்கல் திரோம்பேக்டோமி, பிளாஸ்மா பரிமாற்றம் மற்றும் ஐவிஐஜி போன்றவற்றை முதலில் வழங்கிய மருத்துவமனை.
 • கரோட்டிட் ஆஞ்ஜியோபிளாஸ்டி மற்றும் ரத்த நாள சிகிச்சை போன்ற சிகிச்சைகளை முதலில் செய்தவர்கள்.
 • மாவட்டத்திலேயே எம்ஆர்ஐ மற்றும் சிடி போன்ற ஸ்கேன் வசதிகளுடன் உயர்தர சிகிச்சையை முதலில் வழங்கியது டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை,
 • நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவுடன் இயங்கும் முதல் மற்றும் ஒரே சிறப்பு மருத்துவமனை எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை.

எதிர்கால கொள்கைகள்

அனைவருக்கும் உயர்தர மற்றும் குறைந்த செலவில் மருத்துவம் என்பதே எங்களின் இலக்கு. அதுவே எங்களுக்கு மனித உயிர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க எவ்வளவு மேம்படுத்த வேண்டும் என்பதை நோக்கி அழைத்துச்செல்கிறது. கீழ்காணும் கொள்கைகளே நாங்கள் தரமான சிகிச்சை வழங்குவதற்கு எங்களுக்கு உதவுகிறது.

 • அன்பு மற்றும் கருணையுடன் அனைவரையும் நடத்த வேண்டும்.
 • சிகிச்சையளிக்கும் ஒவ்வொரு நோயாளியும் விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உதவுவது.
 • ஒவ்வொருவரின் மதிப்பையும் அங்கீகரித்து, அதை உறுதிப்படுத்துவது.
 • மருத்துவ நடைமுறை அடிப்படையில் உயர்தர சிறப்பு கிகிச்சை வழங்குவது.

 பேராசிரியர் டாக்டர் எஸ். வாஞ்சிலிங்கம் எம்டி, டிஎம்.

நரம்பியல் பிரிவில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற எங்கள் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் எஸ். வாஞ்சிலிங்கம் எம்டி, டிஎம், ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் நாட்டிலேயே மூத்த நரம்பியல் நிபுணர். நரம்பியல் துறையில்அதிக அனுபவம் பெற்ற மருத்துவராவார். அவரது நிபுணத்துவத்தால், ஏராளமான நோயாளிகள் நன்மை பெற்றுள்ளனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு சிக்கலான நரம்பியல் நிலைகளுடன் வருபவர்களுக்கும் உதவிய பெருமை எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் அவர்களைச்சேரும்.

தமிழ்நாடு நரம்பியல் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். இந்தியாவில் பல்வேறு மருத்துவக்குழுவிலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். தேவை உள்ளவர்களுக்கு குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை என்பதும், இந்த மருத்துவமனையின் உதவியுடன் அந்த இலக்கை அடைவதும் அவரது நம்பிக்கையாகும்.

டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் அவர்கள் குறித்து

டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம், மாநிலத்தில் முதல் இன்டர்வென்ஷனல் நியூராலஜிஸ்ட் ஆவார். பக்கவாதத்திற்கு நியூரோ இன்டர்வென்ஷனல் சிகிச்சை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். புது டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில், நியூரோ எண்டோவாஸ்குலர் துறை மருத்துவர் சாகிர் ஹீசேனிடம் மூத்த ஆராய்ச்சி மாணவராக இருந்தவர்.

டாக்டர் சோமேஸ் வாஞ்சிலிங்கம் அவர்களும் அனுபவம் வாய்ந்த நரம்பியல் நிபுணராவார். தீவிர பக்கவாதத்திற்கு எண்ணிலடங்கா நியூரோஎண்டோவாஸ்குலர் சிகிச்சை செய்தவர். பல்வேறு வகை பக்கவாதம் மற்றும் நரம்பியல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதை அர்ப்பணிப்புடன் செய்து வருபவர். இந்திய நரம்பியல் சங்கம், இந்திய பக்கவாத சங்கம் மற்றும் அமெரிக்கன் நரம்பியல் அகாடமி ஆகியவற்றின் உறுப்பினர்.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை