அக்யூட் மற்றும் க்ரானிக் டிமையிலியனேடிங் கோளாறுகள்

அக்யூட் மற்றும் க்ரானிக் டிமையிலியனேடிங் கோளாறுகள்

டிமையிலியனேடிங் கோளாறுகள் என்றால் என்ன?

டிமையிலியனேடிங் கோளாறுகள் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகள் ஆகும்.நரம்பு செல்களை பாதுகாக்கும் காப்புறையில் ஏற்படும் சேதம் டிமையிலியனேடிங் கோளாறுகள் எனப்படும்.இந்த சேதத்தால், பாதிக்கப்பட்ட நரம்புகளில் சிக்னல்களை கடத்துவது பலவீனமாக இருக்கும்.இதனால் எந்த நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதோ அதைப்பொறுத்து, உடலை இயக்குவதில், உணர்தலில், அறிவாற்றலில் என பல்வேறு செயல்பாடுகளில் குறைபாடு ஏற்படும்.

கோளாறின் வகைகள்

பொதுவாக அவை இரண்டு வகைப்படும்.

டிமையிலியனேடிங் மைலினோகிளாஸ்டிக் கோளாறுகள் – இயல்பான மற்றும் ஆரோக்கியமான நரம்பு காப்புறைகள், ரசாயனங்கள், தீங்குவிளைவிக்கக்கூடிய பொருட்கள் அல்லது ஏதேனும் உடல் எதிர்ப்புதிறனால் பாதிக்கப்படும்.

டிமையிலியனேடிங் லியூக்கோடைஸ்ட்ரோபிக் கோளாறுகள் – நரம்பு காப்புறையே இயல்பாக இல்லாமல் குறிப்பிட்ட காலகட்டத்தில் சேதமடைந்திருக்கும்.

கோளாறுக்கான காரணங்கள்

சில கோளாறுகள் மரபணுக்களால் ஏற்படுகின்றன.சில தொற்றுகளாலும், சில உடல் எதிர்ப்புத்திறனாலும் ஏற்படுகின்றன.மேலும் சிலவற்றிற்கான காரணங்கள் இதுவரை மருத்துவ அறிவியலிலே கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.ஆர்கானோபாஸ்போபேட் என்ற, பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தக்கூடிய ராசாயனம் நரம்புக்காப்புறையில் காணப்படுகிறது.இதை தவிர இந்த கோளாறு ஏற்படுவதற்கு நியூரோலெப்டிக்சும் காரணமாகிறது.

அக்யூட் டிமையிலியனேடிங் கோளாறுகள்

நரம்பு காப்புறை சேதமடைவதால் பல்வேறு கோளாறுகள் ஏற்படுகின்றன.அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

குயில்லன் பர்ரே நோய்த்தாக்கம்

இது புற நரம்பு மண்டல கோளாறு ஆகும்.இந்த நோய்த்தாக்கத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி நரம்புகளை தாக்கி, இறுதியில் முற்றிலும் அழித்தேவிடுகிறது.இது பலவீனத்தில் தொடங்கி, கூச்ச உணர்வுகளை கொடுக்கிறது. இந்த கோளாறு தீவிரமான நிலையில், இது உடலில் விரைந்து பரவி, முடிவில், உடல் முழுவதையும் முடக்கிவிடும்  எனவே தான் இது தீவிர மற்றும் நீடித்த நோயாக உள்ளது. இதனால் பாதிக்கப்படும் நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிறந்த சிகிச்சையளிக்கப்படவேண்டும்.

ADEM எனப்படும் ஏடிஈஎம்

அக்யூட் டிசெமினேட்டட் என்சபாலோமைலிட்டிஸ் அல்லது அக்யூட் டிமைலியனேட்டிங் என்சபாலோமைலிட்டிஸ் என்பதன் சுருக்கமே ADEM ஆகும்.இது ஒரு அரிய, ஆனால், மூளை மற்றும் முதுகெலும்பை பாதிக்கக்கூடிய நோயாகும்.மூளையிலும், முதுகெலும்பிலும் திடீரென வீக்கத்தை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கும்.அந்த தாக்குதல் நரம்பை மூடியிருக்கும் உறையை சேதப்படுத்தி, வெள்ளை அணுக்களை அழிக்கும்.இது நோயுற்ற தன்மை மற்றும் இறப்புடன் தொடர்புடையது.

குறுக்குவெட்டு அழற்சி

இது தண்டுவடத்தின் இருபக்கங்களிலும், ஏதேனும் ஒரு இடத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும்.இந்த நரம்பியல் கோளாறு நரம்பு செல்களில் உள்ள புறக்காப்பு உறையை அரித்துவிடுகிறது.நரம்பு மூலம் உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் தகவல்களை தடுக்கிறது.இந்த கோளாறின் தீவிர நிலையில் வலி மற்றம் பலவீனம் மிகப்பொதுவான ஒன்றாகும்.இது முழு உடலையும் முடக்கிவிடும்.நன்றாக குணமடைய இந்த கோளாறுக்கு முறையான மருந்து மற்றும் மறுவாழ்வு சிகிச்சைகளும் தேவை.

எங்கள் சேவைகள்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் உள்ள நரம்பியல் நிபுணர்கள் குழுவிடம் போதிய நிபுணத்துவமும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.இந்த கோளாறின் அனைத்து வகையான நோய்க்கும் எங்களிடம் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன.இதன் மூலம் இந்த தீவிர நோய் தாக்கங்களுக்கு ஆளாகும்போதுகூட நோயாளிகளால் தொடர்ந்து நல்வாழ்வு பெற முடியும்.டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் உள்ள இற்த சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா பரிமாற்றம்:  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தீங்கு விளைவிக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளை ரத்தத்திலிருந்து நீக்கிவிட்டு, (இது தானாகவே ரத்த செல்களை பிரிப்பதன் மூலம் செய்யப்படுகிறது) தண்ணீரின் அளவை உறுதி செய்வதற்காக வழக்கமான பிளாஸ்மா அளவு பராமரிக்கப்படுவதற்கு உதவுவார்கள். எங்களின் நிபுணத்துவம் பெற்ற சிகிச்சையாளர்கள் இந்த பிளாஸ்மா பரிமாற்றம் சிறந்த முறையில் நடைபெறுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

எதிர்ப்பு புரதங்களை நரம்பு வழியாக செலுத்துவது: இந்த சிகிச்சையில் எங்களின் சிறப்பு மருத்துவர்கள், சிறப்பான சிகிச்சைக்காக எதிர்ப்பு புரதங்களை கலந்து நேரடியாக நரம்புகளின் மூலம் உடலில் செலுத்துவார்கள். முன்பெல்லாம் இது கிடைக்காது.தற்போது இந்த ஐவி எதிர்ப்புப்புரதங்கள் வணிக பயன்பாட்டுக்கு கிடைக்கின்றன.இதனால் அவற்றை தயாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ரிட்டுக்ஷிமேப்: இந்த அனைத்து வகை நோய்களுக்கும் இந்த எதிர்ப்புப்புரதம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகள் நோய்த்தாக்கத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட நல்ல பலனைக்கொடுக்கிறது.நமக்கு இந்த மருந்துகளை பயன்படுத்துவதில் அனுபவமும், நிபுணத்துவமும் உள்ளது.

எங்களின் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை சிறப்பான பராமரிப்பை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.இதனால் எங்களின் சிறந்த சிகிச்சை முறைகளை பயன்படுத்தி, சிகிச்சைகளில் நல்ல பலன்களை பெறுவது எங்களுக்கு சுலபமானது.இந்த கோளாறுகளுடன் வரும் நோயாளிகளை நாங்கள் திருப்பி அனுப்பாமல், சிறப்பான சிகிச்சையை உறுதியாக்குகிறோம்.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை