ரத்த நாள கோளாறு

ரத்த நாள கோளாறு

Brain aneurysm எனப்படும் மூளை ரத்த நாள கோளாறு – தலைவலிக்கான சிகிச்சைகள் 

Brain aneurysmஎனப்படும் ரத்த நாள கோளாறு

மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கம் Brain aneurysm எனப்படும் மூளை ரத்த நாள கோளாறு எனப்படுகிறது.சில நேரங்களில் தண்டில் தொங்கும் பெர்ரி பழங்களைப்போல் இருக்கும்.இவை சிதையலாம் அல்லது இவற்றில் இருந்து கசிவு ஏற்படலாம்.மூளைக்கும், மூளையை மூடியிருக்கும், திசுவிற்கும் இடையே இவை சிதைவடைந்து காணப்படுவது பொதுவான ஒன்றாகும்.இந்த வகை ரத்தக்கசிவினால் ஏற்படும் பக்கவாதம் சப்அரக்னாய்ட் ஹெமோர்ஹேஜ் எனப்படும்.சிதைந்த ரத்த நாளம் திடீரென வீங்கி வாழ்க்கைக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையலாம்.இந்த நிலை ஏற்படும்போது தேவையான மருத்துவ சிகிச்சைகள் அவசியமாகின்றன.பெரும்பாலான மூளை ரத்த நாள கோளாறுகள் சிதையாது.அவை ஏதேனும் உடல்நலக் குறைபாட்டை மட்டுமே ஏற்படுத்தும்.அவற்றை பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்க முடியும்.சில நேரங்களில் இவற்றிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு, எதிர்காலத்தில் அவை, மீண்டும் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.உங்களுக்கு தேவையான மருத்துவ அறிவுரைகளை மருத்துவரிடம் பேசி தெரிந்துகொள்வது சிறந்தது.

Brain aneurysm எனப்படும் ரத்த நாள கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

இதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.மூளை ரத்த நாள கோளாறு மெல்லிய தமனி சுவர்களில் உருவாகும்.பொதுவாக அவை தமனிகளின் கிளைகளில் அவை உருவாகும்.ஏனெனில் அவைதான் பலவீனமான பகுதியாகும்.மேலும் அவை எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.மூளையின் அடிப்பகுதியிலும் அவை பொதுவாக உருவாகும்.எதுவாக இருந்தாலும் அது ஆபத்துதான்.

ஆபத்துக்காரணி என்னென்ன?

இது குழந்தைகளைவிட பெரியவர்களுக்கே பொதுவாக ஏற்படும்.ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் ஏற்படும்.சில ஆபத்து காரணிகள் மட்டும் இடையில் ஏற்படும், மற்ற அனைத்தும் பிறக்கும்போதே இருந்திருக்கும். இடையில் ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

 • புகை பிடித்தல்
 • முதுமை
 • உயர் ரத்த அழுத்தம்
 • போதை அல்லது கொக்கைன் பழக்கம்
 • அதிகளவிலான மதுப்பழக்கம்

ரத்தத்தொற்று அல்லது தலையில் அடிபடுவதாலும் சில வகையான மூளை ரத்த நாள கோளாறுகள் ஏற்படுகின்றன.

பிறக்கும்போதே ஏற்படும் ஆபத்துக்கான காரணிகள்:

 • பாலிசிஸ்டிக் சிறுநீரக கோளாறு – இது பரம்பரை நோயாகும். இந்த கோளாறால், சிறுநீரகத்தில் அதிக நீர் தேங்கியிருக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
 • பரம்பரை இணைப்பு திசு கோளாறு – இஹெல்லர்ஸ் டாண்லோஸ் சின்ட்ரோமுடன் சேர்ந்ததாகும். ரத்த குழாய்களையும் சேர்த்ததாகும்.
 • மூளை தமனி குறையுடன் கூடிய உருவ அமைப்பு – மூளையில் உள்ள நரம்புகள் மற்றும் தமனிகளின் அசாதாரணமான இனைப்பு, இயல்பான ரத்த ஓட்டத்திற்கு இடையூறு செய்யும் வகையில் அமைந்திருப்பது.
 • அசாதாரணமாக குறுகலான பெருந்தமனி
 • மூளை ரத்த நாள கோளாறால் குடும்பத்தில் பாதிப்பு – பெற்றோருக்கு, உடன்பிறந்தவர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு இருந்தால் நமக்கும் பாதிக்க வாய்ப்புள்ளது.

இந்த கோளாறின் அறிகுறிகள் என்னென்ன?

நோயின் தீவிரம் எந்த நிலையில் உள்ளதோ அதற்கேற்ப அறிகுறிகள் மாறுபடும்.

சிதைந்த மூளை ரத்த நாள கோளாறு

முக்கிய அறிகுறி திடீரென ஏற்படும் கடுமையான தலைவலி.இது மோசமான தலைவலி என்று அழைக்கப்படுகிறது. சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

 • குமட்டல் மற்றும் வாந்தி
 • கழுத்து விறைத்தல்
 • தொய்வான கண் இமைகள்
 • குழப்பம்
 • உணர்வு குறைதல்
 • இரட்டை அல்லது மங்கலான பார்வை
 • வலிப்பு
 • வெளிச்சத்திற்கு கண் கூசுவது

மூளை ரத்த நாள கசிவு

சில நேரங்களில், மூளை ரத்த நாளங்களில் இருந்து குறிப்பிட்ட அளவிலான ரத்தக்கசிவு ஏற்படுவது இயல்பாகும்.இந்த கசிவு அல்லது ரத்தப்போக்கே கடுமையான தலைவலிக்கு காரணமாகும்.கடுமையான சிதைவும் கூட தலைவலியை ஏற்படுத்தும்.

பாதிப்பை ஏற்படுத்தாத மூளை ரத்த நாள கோளாறுகள்

சிதையாத அல்லது சிறிய மூளை ரத்த நாளங்கள் கோளாறுகள் எந்த அறிகுறியையும் காட்டாது.எனினும் பெரியவை, மூளை நரம்புகள் மற்றும் திசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து, பின்வரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

 • நீடித்த பிரச்னைகள்
 • முகத்தின் ஒரு புறத்தில் உணர்வின்மை
 • பார்வையில் மாற்றம் அல்லது மங்கலான பார்வை
 • கண்களுக்கு மேல் அல்லது பின்னே வலி

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

கடுமையான தலைவலி ஏற்படும்போது, உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை