சான்றுகள்

சான்றுகள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம்

ரமேஷ், நீடாமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்.17 வயது இளைஞர், பொறியியல் மாணவர்.3 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திடீரென மங்கலான பார்வை, உணர்வு இழப்பு ஏற்பட்டது.அவருக்கு செரிபிரல் ஏவிஎம் எனப்படும் பெருமூளையில் நரம்புகளுக்கும், தமனிகளுக்கு இடையே அசாதாரணமான தொடர்பு உள்ள நோய் இருந்தது.அவரும் முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் பலனடைந்தார்.அவர் ஒரு தினக்கூலி தொழிலாளரின் மகன்.அவரின் தந்தை டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையை அணுகினார்.அவருக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏவிஎம் எம்பாலிசன் எனப்படும் தொழில்நுட்ப நவீன சிகிச்சை எங்கள் கேத் ஆய்வகத்தில் வழங்கப்பட்டது.அவருக்கு தற்போது புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.

மூளையில் உள்ள ரத்தக்குழாயில் ஏற்படும் கட்டிகள் மூளை ரத்த நாள  நெளிவு என்றழைக்கப்படுகின்றன. இதனால் சிதைவு அல்லது கசிவு ஏற்பட்டு மூளையில் ரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படுகிறது. சிதைவடைந்த மூளை ரத்த நாள நெளிவு நோய் உயிரிழக்கச்செய்யக்கூடிய நோயாகும் மற்றும் மூளைக்கும், மூளையை மூடியிருக்கும் மெல்லிய உறைக்கும் இருக்கும் இடைவெளியில் இது ஏற்படுகிறது. சிதைக்கப்பட்ட மூளை ரத்த நாள நெளிவு என்பது சர்அரக்னாய்டு ரத்தக்கசிவு என்று அழைக்கப்படுகிறது.

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2

திருமதி சரஸ்வதி (49), கும்பகோணத்தை சேர்ந்த மகிழ்ச்சியான இல்லத்தரசி.ஓராண்டுக்கு முன் இவர், வாழ்வையே அச்சுறுத்தக்கூடிய மூளை ரத்த நாள நெளிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இவர் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எண்டோவாஸ்குலர் காயிலிங் சிகிச்சை செய்துகொண்டார்.இவர் தற்போது நன்றாக இருக்கிறார்.நல்ல முறையில் அவரின் குடும்பத்தை கவனித்து வருகிறார்.அவருக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டமே உதவியது.இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்களும் உயர்தர சிகிச்சை பெறுவது எளிதானது.

தசைகளைப்பு நோய் சிகிச்சை பெற்ற நோயாளியின் சான்று

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை