தண்டுவட வட்டு நோய் மேலாண்மை

தண்டுவட வட்டு நோய் மேலாண்மை

தண்டுவட வட்டு நோய் மேலாண்மை (கழுத்து மற்றும் கீழ் பின்புற வலி) (DISC DISEASE  MANAGEMENT ( NECK & LOWER BACK PAIN )

தண்டுவட வட்டு நோய் மேலாண்மை (Treatment of Cervical radiculopathy/myelopathy and Lumbo Sacral Radiculopathy)

தண்டு வட வட்டு நோய் என்றால் என்ன?

முதுகில் கீழ்புறமும், கழுத்திலும் வலி ஏற்படுவது தண்டுவட வட்டு நோய் என்று அழைக்கப்படுகிறது.இவ்விரு இடங்களிலும் ஏற்படும் வலியை அறிகுறியாக கொண்டுள்ளது.அன்றாட பயன்பாட்டினால் முதுகெலும்பு வட்டு சேதமடைவதேயாகும்.சில நேரங்களில் உணர்ச்சியின்மையையும், பலவீனத்தையும், கைகளிலும், கால்களிலும் வலியையும் ஏற்படுத்தும்.இது தீவிர வலி என்று அழைக்கப்படுகிறது.இந்த நோய் சிதைக்கக்கூடிய நோயாகும்.வயதாகும்போது இதன் நிலை மேலும் மோசமடையும்.இந்நோயைப் பொறுத்தவரை, வயது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நாள்பட்ட மித வலியையும், இடைஇடையே கடும் வலியையும் ஏற்படுத்தியிருக்கும்.

இந்நோயை கையாள நாங்கள் எவ்வாறு உதவுகிறோம்?

எங்களின் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை தண்டு வட வட்டு நோய் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றது.இதனால் ஏற்படும் நாள்பட்ட தீவிர நோயில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம்.

அறுவைசிகிச்சை இல்லாத முறைகள்

நாங்கள் அறுவைசிகிச்சை இல்லாத முறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம்.அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • வலி மருந்துகள்

தண்டுவட வட்டு நோய் மேலாண்மையில், வலி மருந்துகள் மூலம் எங்கள் சிகிச்சையை துவங்குகிறோம்.ஆஸ்பிரின், நெப்ரோக்சன், இபுப்ரோபன் போன்ற வலி நிவாரணிகளை பயன்படுத்துகிறோம்.அது வீக்கத்தையும் குறைக்கிறது, இறுக்கத்தை தளர்த்துவதிலும் உதவுகிறது, எரிச்சல் மற்றும் அசௌகர்யத்தையும் குறைக்கிறது.கடுமையான வலிக்கு நாங்கள் தூக்கத்தை ஏற்படுத்தும் வலி நிவாரணிகளை பயன்படுத்துகிறோம்.அதுவே கடுமையான வலிகளை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது.

  • TENS அலகு

TENS (transcutaneous electrical nerve stimulation) அலகு என்பது மின்சிகிச்சை முறை.இந்த கருவி மூலம் உடலில் மின்சாரம் உடலில் செலுத்தப்படுகிறது.வலி உள்ள இடங்களில் இதை பயன்படுத்தும்போது, அது வலியை குறைக்கிறது.மின்முனை பட்டைகள் மற்றும் வயர்களால் இணைக்கப்பட்டுள்ள சிறிய கருவியால், நேரடியாகவே நோயாளியின் தோலில் மின்சாரத்தை பாய்ச்ச முடியும்.எங்களின் மருத்துவர்கள், வலிக்கு தேவையான அளவு மின்சாரத்தை ரிமோட் கண்ரோல் மூலம் சரிசெய்வார்கள்.

  • அல்ட்ராசவுண்ட்

பின்புறத்தில் கடுமையான வலி ஏற்பட்டால், அல்ட்ராசவுண்டை பயன்படுத்தி, அந்த பகுதியை இளஞ்சூடாக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, வலியுள்ள இடத்தில், சக்தியை அதிகரிக்கச்செய்கிறோம்.

அறுவைசிகிச்சை முறைகள்

அறுவைசிகிச்சை செய்யாமல் சிகிச்சையளிப்பது மட்டுமின்றி, சில தீவிரமான நிலைக்கு அறுவைகிசிச்சைகள் மேற்கொண்டு சிகிச்சைகள் செய்கிறோம். தண்டுவட வட்டு நோயை கையாளும்போது, தண்டுவட இடைவட்டு இறக்கத்தால், செர்விக்கல் ரெடிகுளோபதி, லம்கோசாக்ரால் ரெடிகுளோபதி மற்றும் செர்விக்கல் மைலோபதி ஆகியவை ஏற்படுகின்றன. இதற்கும், இது தொடர்பான மற்ற நோய்களுக்கும் எங்களின் பயிற்சிபெற்ற மருத்துவர்கள் அறுவைசிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கின்றனர்.

அறுவைசிகிச்சை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • முதுகெலும்பு இணைவு அறுவைசிகிச்சை

தண்டுவட வட்டு மேலாண்மையில், இரு முதுகெலும்புகள் ஒட்டி அல்லது இணைந்திருந்தால், இந்த அறுவைசிகிச்சை எங்களின் சிறந்த மருத்துவக்குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அறுவைசிகிக்சையின் முக்கிய நோக்கமே, தண்டுவடப்பகுதியில் உள்ள இயக்கத்தை குறைத்து, நோயாளியின் வலியை குறைப்பதாகும்.

  • செயற்கை வட்டு மாற்றும் அறுவைசிகிச்சை

தண்டுவட வட்டை முழுமையாக நீக்கிவிட்டு, அங்கு செயற்கை வட்டைபொறுத்தி, பழைய வட்டு இருந்த இடத்தை சமன் செய்வதே இந்த அறுவைசிகிச்சையாகும்.

  • லேமினக்டமி

இது ஒரு அறுவைசிகிச்சை முறையாகும்.இதில் முதுகெலும்பின் ஒரு அடுக்கு நீக்கப்பட்டு, தசையின் பின்புறத்தைக்கொண்டு, வெட்டி எடுக்கப்படாமல் அந்த இடத்தை நிரப்பிவிடுவார்கள்.இது ஒரு ஓய்வளிக்கும் அறுவைசிகிச்சையாகும்.இதில் முதுகெலும்பின் விரிவாக்கம், தண்டுவடத்தில் இதுவரை கொடுக்கப்பட்ட அழுத்தத்தை குறைக்கவும், நரம்புகளுக்கு ஓய்வளிக்கவும் உதவுகிறது.

  • மைக்ரோஸ்கோபிக் டிஸ்க்எக்டாமி

இடுப்பின் கீழ் பகுதியை அறுவைசிசிக்சை மூலம் திறந்து சேதமடைந்த வட்டின் பகுதியை நீக்குவதாகும்.இதன் மூலம் நரம்பு திசுக்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த அழுத்தம் குறையும்.வலியை குறைக்கவும் உதவும்.

  • எண்டோஸ்கோபிக் டிஸ்க்எக்டாமி

இதுவும் இடுப்பின் கீழ்பகுதியில் செய்யும் அறுவைசிகிச்சைதான்.ஒரு குழாய் கருவியின் உதவியோடு துளையிட்டு செய்யப்படும் சிகிச்சையாகும்.வட்டு இறங்கியுள்ளதால் ஏற்படும் வலியை சரிசெய்வதற்காக செய்யப்படும் சிகிச்சையாகும்.இறங்கியுள்ள வட்டு நரம்பின் வேர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும்.இந்த முறையில் அறுவைசிகிச்சையினால் ஏற்படும் வலி குறைவாக இருக்கும்.ஏனெனில் இது பிரச்னை உள்ள இடத்தை திறந்து செய்யாமல், துளையிட்டு செய்யப்படுவதால் வலி குறைவாக இருக்கும்.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை