டாக்டர் ஆர். நித்யானந்த், தனது எம்.சிஹெச் (நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்) படிப்பை , இந்தியாவிலேயே புகழ்பெற்ற நிறுவனங்களுள் ஒன்றான, மெட்ராஸ் நரம்பியல் அறுவைசிகிச்சை மையத்தில் கற்றார். அவர் படிப்பில் சிறந்து விளங்கியதற்காக, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவராவார். அவர் நியூரோவாஸ்குலர், மண்டைஓட்டு கட்டிகள், நியூரோ எண்டோஸ்கோப்பி, கிரானியோவெர்டபிரல் ஜங்ஷன் அனாமலீஸ் மற்றும் முதுகெலும்பு கட்டிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினார். நரம்பியல் நுண்ணோக்கி மற்றும் நரம்பியல் எண்டோஸ்கோப்பி போன்றவற்றை நோயாளிகளுக்கு துல்லியமாக அறுவைசிகிச்சை செய்ய பயன்படுத்தினார். வழக்கமான நரம்பியல் அறுவைசிகிச்சை செயல் முறைகளில், கூடுதலாக பெருமூளை ரத்த நாள நெளிவு, தமனி நரம்பு சிதைவு, மைக்ரோவாஸ்குலர் டிகம்ரசன், மூளை மற்றும் முதுகெலும்பு கட்டிகள், முதுகெலும்பு உறுதியின்மை போன்றவற்றிற்கு கூடுதலாக சிறப்பு சிகிச்சையளித்தார்.
இவர் தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின், நரம்பியல் துறையில் உதவிப்பேராசிரியராக பணியாற்றினார். டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் ஆலோசகர் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்.