டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், நரம்பியல் நிபுணர் மற்றும் பக்கவாத மருத்துவர். இவர்தான் மருத்துவமனையை ஒரு முழுமையான நரம்பியல் சிகிச்சை மையமாகவும், சர்வதேச தரம் வாய்ந்த வசதிகள் கொண்ட சிறந்த இடமாக மாற்றினார். இதனால் இம்மருத்துவமனை தற்போது பல்வேறு வசதிகளுடன், அனைத்து வகையான நரம்பியல் சிகிச்சைகள் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சைகளையும், குறிப்பாக தீவிர மற்றும் நாள்பட்ட நரம்பியல் கோளாறுகளுக்கும் சிறப்பாக சிகிச்சை செய்யும் அளவிற்கு உயர்ந்து விளங்குவதற்கு இவரின் அர்ப்பணிப்பும், சீரிய முயற்சியுமே காரணமாகும்.
டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம், மாநிலத்திலேயே முதல் மற்றும் சிறந்த இன்டர்வென்ஷனல் நரம்பியல் சிறப்பு நிபுணராவர். இவர் நியூரோஇன்டர்வென்ஷனல் பக்கவாத சிகிச்சை சிறப்பு நிபுணராவார். 500க்கும் மேற்பட்ட ஆஞ்ஜியோகிராம்களும், 50க்கும் மேற்பட்ட மூளை ரத்த நாள காயிலிங் சிகிச்சையும் மற்றும் தீவிர பக்கவாதத்தை குணப்படுத்த சிக்கலான நியூரோ இன்டர்வென்ஷனல் சிகிச்சையும் செய்துள்ளார். 2007ம் ஆண்டு முதல், டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் நரம்பியல், பக்கவாத, இன்டர்வென்ஷனல் மற்றும் நரம்பியல் அதீதிவிர அவசர சிகிச்சைகளுக்கு இவரே முதன்மை ஆலோசகராக இருந்து வருகிறார். சென்னை அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் நரம்பியல் நிபுணர் மற்றும் ஆலோசகர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் வீ கேர் மருத்துவமனையின் நரம்பியல் ஆலோசகர். புதுடெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைசிறந்த இன்டர்வென்ஷனல் நியூராலஜிஸ்ட் டாக்டர் ஜாகிர் ஹீசேன் அவர்களிடம் நியூரோ வாஸ்குலர் சிகிச்சை துறையில் மூத்த ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளார். புது டெல்லி மேக்ஸ் சிறப்பு மருத்துவமனையிலும் பணிபுரிந்துள்ளார். அவர் தொழில் ரீதியாக கீழ்கண்டவற்றில் ஈடுபட்டுள்ளார்.
இவர் தனது எம்பிபிஎஸ் மற்றும் எம்டி (பொது மருத்துவம்) படிப்புகளை தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் படித்தார். பின்னர் நரம்பியல் துறையில் டிஎம் படிப்பை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கற்றார். இன்டர்வென்ஷனல் நியூராலஜி மற்றும் பக்கவாத படிப்புகளை புதுடெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் கற்றுள்ளார். அவரின் அர்ப்பணிப்பு, சிகிச்சை வழங்குவதிலும், அவரின் ஆராய்ச்சி பணிகளிலும், அவரின் பயிற்சி பட்டறைகள் மூலமமே நமக்கு புலப்படும்