டாக்டர் கார்த்திக்கேயன் வாஞ்சிலிங்கம், டிஎம்ஆர்டி, எம்டி, எப்ஆர்சிஆர் சான்றளிக்கப்பட்ட இன்டர்வென்ஷனல் நியூராஜிஸ்ட் ஆவார். இவர் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறை நிபுணராவார். இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி முறைகளை செய்வதில் சிறந்த அனுபவம் உள்ளவர். டாக்டர் கார்த்திக்கேயன் வாஞ்சிலிங்கம், தனது எப்ஆர்சிஆர்/எம்.எம்இடி டைக்னஸ்டிக் ரேடியாலஜி பட்டத்தை மே 2013ம் ஆண்டு, லண்டன் ரேடியாலஜி ராயல் கல்லூரி மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் இருந்து பெற்றார். இன்டர்வென்ஷனல் நியூரோ மற்றும் வாஸ்குலர் ரேடியாலஜியில் முதுகலை டாக்டர் பட்டத்தை 2012ம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார். தற்போது எங்கள் மருத்துவமனையில், 2012ம் ஆண்டு முதல், இன்டர்வென்ஷனல் நியூரோரேடியாலஜிஸ்ட் மற்றும் ஆலோசகராகவும் உள்ளார். இன்டர்வென்ஷனல் நரம்பியல் ஜிஐ/ஜியு இமேஜிங் மற்றும்
வாஸ்குலர் ரேடியாலஜியில் மிகவும் திறமை வாய்ந்தவராவார். டாக்டர் கார்த்திக்கேயன் வாஞ்சிலிங்கம், நிறைய சுகாதார நிறுவனங்களின் ரேடியாலஜி துறையின் அங்கமாகவும் உள்ளார். இந்திய மருத்துவ கவுன்சில், லண்டல் ராயல் ரேடியாலஜி கல்லூரி, வட அமெரிக்காவின் ரேடியாலாஜிகல் சொசைட்டி, ஜரோப்பிய ரேடியாலஜி சொசைட்டி மற்றும் இந்திய ரேடியாலஜி மற்றும் இமேஜிங் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். இதைத்தவிர, தன்னை புதுப்பித்துக்கொள்ள பல்வேறு மருத்துவ கருத்தரங்கங்களிலும் கலந்துகொண்டு வருகிறார். ஒரு ரேடியாலஜிட்ஸ்ட்டாக, அவரின் திறன்கள் சிகிச்சையில் வெளிப்படும். எனினும் தனது திறன்களை அதிகரித்துக்கொள்வதற்கு அவர் 2006ம் ஆண்டு முதல், இந்தியா, ஹாங்காங் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும், பல்வேறு மாநாடுகள் மற்றும் பயிற்சி பட்டறைகளிலும் பங்கேற்கிறார். சிறப்பாக பேசக்கூடியவர் என்பதால், அவரால் சிக்கலான கருத்துக்களையும், அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக கூறமுடியும்.
டாக்டர் கார்த்திக்கேயன் வாஞ்சிலிங்கம், அவரின் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் அனைத்தும் மருத்துவ மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதற்காக அவர் பல்வேறு கற்பித்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவற்றில் கலந்துரையாடல்கள், கருத்தரங்கங்கள், பத்திரிக்கை குழுக்கள் உள்ளிட்டவையாகும். இவற்றில் எம்பிபிஎஸ் மாணவர்கள் மற்றும் ரேடியாலஜி முதுநிலை மாணவர்களும் கலந்துகொள்கின்றனர்.
இன்டர்வென்ஷனல் நியூரோரேடியாலஜியில், இவருக்கு நீண்ட வரலாறு உண்டு. இவரின் துல்லியமான, விரிவான கணிப்புகள் மூலம் நோயாளிகளுக்கு சிறந்த தீர்வு கிடைத்துள்ளது. இவரின் எளிமையே நோயாளிகள் எளிதாக அவரை அணுவதற்கு உதவுகிறது. அவர் நோயாளிகளுடன் பேசும்போது, அவர்களுக்கு புரிந்த எளிய மொழியில் பேசி நோயின் நிலையையும், செய்ய வேண்டிய சிகிச்சையின் அளவு குறித்தும் பேசுவார்.