இன்டர்வென்ஷனல் நியூராலஜி (நரம்பியல் கோளாறுகளுக்கு கதிரியக்கவியல்)

இன்டர்வென்ஷனல் நியூராலஜி (நரம்பியல் கோளாறுகளுக்கு கதிரியக்கவியல்)

இன்டர்வென்ஷனல் நியூராலஜி (நரம்பியல் கோளாறுகளுக்கு கதிரியக்கவியல்)

இன்டர்வென்ஷனல் நியூராலஜி என்றால் என்ன?

நரம்பியல் கோளாறுகளுக்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சைதான் இன்டர்வென்ஷனல் நியூராலஜி. நரம்பியலின் துணை சிறப்பு பிரிவுதான் இன்டர்வென்ஷனல் நியூராலஜி என்பது அது கதிரியக்கவியலுடன் சேர்ந்து, குறைந்தபட்சம் ஊடுறுவும் தொழில்நுட்பத்தின் சிறப்பை பயன்படுத்தி, படத்தில் உள்ள நிலைகளின் அடிப்படையில் செயல்முறைகள் இருக்கும். இது நோயின் நிலையை கண்டறிந்து, பல நிலைகளுக்கு சிகிச்சையளிக்கவும் அல்லது மூளை, தண்டுவடம் மற்றும் கழுத்துப்பகுதிகளில் மனிதனின் மத்திய நரம்பு மணடலம் ஆகியவற்றில் உள்ள நோயை கண்டறியப் பயன்படுகிறது. படத்தின் அடிப்படையில்தான் இதற்கு சிகிச்சையளிக்கப்படுவதால், இன்டர்வென்ஷனல் நியூராலஜி, இன்டர்வென்ஷனல் நியூரோரேடியாலஜி என்றும் அழைக்கப்படுகிறது.இந்த செயல்முறைகள் ரத்த குழாய்களின் உள்ளே புகுந்து வேலைசெய்கிறது.இவை எண்டோவாஸ்குலர் கதிரியக்கம் அல்லது எண்டோவாஸ்குலர் நியூரோரேடியாலஜி என்றும் அழைக்கப்படுகிறது.இந்த செயல்முறைகள் குறைந்தபட்சம் ஊடுருவும் இயல்புகொண்டவை.இவற்றை அறுவைசிகிச்சை செய்வதற்கு, சிறியளவில் திறந்து செய்வது போதுமானது.பெரியளவில் கீறவேண்டிய தேவையில்லை.

எங்கள் நிபுணர்கள் பின்பற்றும் நடைமுறைகள்

பெருமை கொள்ளும் வகையில் எங்கள் மருத்துவமனையில் நியூரோவாஸ்குலர் கேத் ஆய்வகம் உள்ளது. அதில் போதிய பயிற்சிபெற்ற, உயர்தரமான மற்றும் பரந்த அனுபவம்கொண்ட நரம்பியல் நிபுணர்கள், இன்டர்வென்ஷனல் சிறப்பு நிபுணர்கள், பக்கவாத நிபுணர்கள், நரம்பியல் மயக்கவியல் வல்லுனர்கள், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள், கதிரியக்கவியல் நிபுணர்கள் மற்றும் பிணி நீக்கும் சிகிச்சை வல்லுனர்கள் கொண்ட குழு உள்ளது. அவர்கள் எவ்வளவு சிக்கலான சூழ்நிலைகளுக்கு, தேவையான மருத்துவ உதவிகளை செய்து நோயாளிகளை குணமடையச்செய்கின்றனர்.எங்கள் குழுவினர் கொடுக்கும் அந்த சிறப்பு சிகிச்சைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

திரோம்போலிடிக் தெரபி அல்லது ஐஏ திரோம்போலிசிஸ்

பக்கவாதத்தை ஏற்படுத்தும், மூளை அல்லது தண்டுவடத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் ரத்தக்கட்டிகளை ஊடறுக்கும் மருந்துகளை கொடுத்து ரத்தக்கட்டிகள் பிரச்னைகளை தீர்ப்பதே இந்த செயல்முறையின் குறிக்கோளாகும். கடுமையான பக்கவாதம் கூட இந்த சிகிச்சையால் கட்டுப்படுத்தப்பட்டு, நோயாளி பழைய நிலையை மீண்டும் அடைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும்.மேலும் அவர்களுக்கு இது உயிர்காக்கும் ஒருமுறையும் ஆகும்.

எண்டோவாகுலர் காயிலிங்

இந்த முறையில் நமது பயிற்சி பெற்ற இன்டர்வென்ஷனல் சிறப்பு நிபுணர்கள் மெல்லிய உலோக கம்பியை உள்ளே சொருகி, சுருள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில், ரத்த ஓட்டத்தை தடுப்பார்கள். மூளை ரத்த நாள கோளாறு என்பது தமனி சுவற்றில் வீக்கம் மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தக்கூடியதாகும், ரத்த ஓட்டத்தை தடுக்கவில்லையெனில் வெடித்துவிடும் ஆபத்து அதிகமுள்ளது.

பெருமூளை குருதிக்குழாய் வரைவி (cerebral angiography)

இது கதிரியக்கவியல் முறை, மூளையின் ரத்த ஓட்டத்தை நுணுக்கமாக அறிந்துகொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.இதன் மூலம் மூளையில் ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்யலாம்.

கரோடிட் ஆர்டெரி ஆஞ்ஜியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்டிங்

மூளைக்கு ரத்தம் வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள கரோடிட் தமனி குறுகலாக இருந்தால், அதை திறப்பதற்கு ஸ்டென்ட் எனப்படும் ரத்தக்குழாய்க்குள் தற்காலிகமாக வைக்கப்படும் ஒரு குழாய் ஆகும். அது ரத்தக்குழாய் நன்றாக திறப்பதற்கோ அல்லது தடையை அகற்றுவதற்கோ உதவும்.இந்த முறையை எங்கள் நிபுணர்கள் சிறிய பலூன் மற்றும் உலோகத்தை பயன்படுத்தி செய்வார்கள்.

பக்கவாதத்திற்கு மெக்கானிக்கல் திரோம்பேக்டோமி

ரத்தக்குழாயில் பெரிய வகை அடைப்பு மற்றும் பெரியளவிலான பக்கவாதம் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க இந்த முறை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.சிறப்பான திரோம்பேக்டோமி கருவிகள் ஸ்டென்டிரிவர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.அவை ரத்த உறைக்கட்டிகளை பிடித்து, அவற்றை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கப் பயன்படுத்தப்படுகிறது.

எங்கள் சேவைகள்

எங்கள் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் நியூராலஜி துறை முறையான நோய் கண்டறிதல் மற்றும் தண்டுவடம் மற்றும் கழுத்து தொடர்பான பல்வேறு நியூரோவாஸ்குலர் சிகிச்சைகளை உள்ளடக்கியது. எங்கள் மருத்துவமனையில் சேவைகள் பின்வரும் அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • நோய் கண்டறிதல் மற்றும் பெருமூளை, தலை, தண்டுவடம் மற்றும் கழுத்து ஆஞ்ஜியோகிராபி மற்றும் கிசிக்சை
 • விளக்கமான நியூரோவாஸ்குலர் மதிப்பீடு மற்றும் இன்டர்வெஷன்களும் பின்வருவனவற்றுள் அடங்கியுள்ளன.
 • தலை மற்றும் கழுத்தில் அகச்சிதைவு குருதி நாள நெளிவு, ரத்தக்குழாய் அடைப்பு சரிசெய்தல்
 • மூளை, தலை, கழுத்து, தண்டுவடம் மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றில் ஏற்படும் எல்லாவகையான வாஸ்குலர் சிதைவு மற்றும் ரத்தக்குழாய் அடைப்புகளை சரிசெய்தல்
 • தமனி சிதைவு, இரட்டை தமனிக்கும், நரம்புக்கும் இடையே உள்ள அசாதாரணமான தொடர்பு, தமனி பிஸ்டுலா, தமனி நரம்புகள் சிதைவு, நிணநீர் சிதைவு
 • நரம்பின் அகச்சிதைவு கோளாறுகளான டியூரல் சைனஸ் ஸ்டெனோசிஸ் மற்றும் சூரோ டியுமர் செரிப்ரி
 • ரத்தக்குழாய் அடைப்பு கட்டிகள்
 • உள் தமனி கீமோதெரபி, அகச்சிதைவு மற்றும் கட்டிகளை குணப்படுத்த சிகிச்சையளிக்கப்படுகிறது. இன்ட்ராவாஸ்குலர் ரெட்டினோப்ளாஸ்டோமா
 • அகச்சிறைவு மற்றும் புறச்சிதைவு ஆஞ்ஜியோபிளாஸ்டி, ஸ்டென்னிங் மற்றும் காயிலிங்
 • பல்வேறு பக்கவாதங்கள், தமனி பிரித்தல், மோயாமோயா நோய்கள் உள்ளிட்ட பக்கவாத நோய்கள். கட்டிகளை நீக்கும் கருவிகள் உதவியோடு செய்யும் கடுமையான ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படும் பக்கவாத சிகிச்சையையும் உள்ளடக்கியது.
 • மற்ற அனைத்து வகையான வாஸ்குலர் நோய்கள்
 • எங்கள் மருத்துவமனையின் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களின் உதவியோடு, அனைத்து வகையான நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் அவசர உதவிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் சிறப்பு நிபுணர், தஞ்சாவூர்

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை