ஞாபகமறதி கோளாறு (அல்சைமர்ஸ் நோய்) சிகிச்சை

ஞாபகமறதி கோளாறு (அல்சைமர்ஸ் நோய்) சிகிச்சை

ஞாபகமறதி கோளாறு என்றால் என்ன?

ஒரு சிறிய அளவிலான ஞாபக மறதி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான்.நமது கார் சாவியை எங்கே வைத்துவிட்டோம் என்பதை மறந்துவிடுவது அல்லது நீண்ட நாட்கள் சந்திராதவர்களின் பெயர்களை மறப்பதெல்லாம் இயல்பான ஒன்றுதான்.நினைவு கோளாறுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நினைவிழப்பு, பணிகள், உங்களின் அன்றாட வேலைகள், சமூக செயல்பாடுகள் மற்றும் இதுபோன்ற பல்வேறு சூழல்களில் குறிப்பிட்ட அளவு இடையூறு ஏற்படுத்தினால் அது முறையான மருத்துவ கவனம் செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இவை பொதுவானவை கிடையாது மற்றும் நினைவிழப்பு கோளாறுகள் என்று அழைக்கப்படுகிறது.

நினைவிழப்பு கோளாறுகள் அடிப்படையில் அறிவாற்றல், நினைவில் வைத்துக்கொள்ளும் திறன், முடிவெடுத்தல், காரணம் மற்றும் சிறப்பாக தொடர்புகொள்வதில் சிரமம் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறுகளாகும். எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் பயிற்சிபெற்ற மருத்துவர்களுக்கு அல்சைமர்ஸ் நோய், வாஸ்குர் டிமென்ஷியா, வாஸ்குலர் அறிவாற்றல் குறைபாடு, மிதமான அறிவாற்றல் குறைபாடு, ஹைட்ரோசெபாலஸ் உள்ளிட்ட அனைத்து வகையான நினைவிழப்பு கோளாறுகளுக்கும் சிறப்பாக சிகிச்சையளிப்பதில், மிகுந்த அனுபவம் உள்ளது.

  • நினைவிழப்பு கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள்
  • நினைவிழப்பு கோளாறுகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
  • முதுமை என்பது நினைவிழப்பு கோளாறின் பொதுவான காரணமாகும்.
  • அதிர்ச்சியும் நினைவிழப்பு மற்றும் மற்ற கோளாறுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.
  • பரம்பரை நோய்கள் எனப்படும் மரபணுக்களுடன் தொடர்புடைய அல்சைமர்ஸ் நோய் போன்ற நினைவிழப்பு கோளாறுகள்.
  • இதயம் தொடர்பான அனைத்து நோய்கள்.
  • சிகிச்சையளிக்காமல் விடப்பட்ட ஏதேனும் தொற்று நோய் அல்லது வளர்சிதை மாற்ற நோய்கள்.
  • மூளைக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் தமனிகள் குறுகுதல்.
  • மூளை கட்டிகள்.
  • வைட்டமின் குறைபாடுகள்.

சில நினைவிழப்பு கோளாறுகள் திடீரென தோன்றும்.ஆனால் மற்றவை பல காலமாக எவ்வித அறிகுறியுமின்றி நம் உடலில் இருக்கும்.எங்கள் டாக்டர். வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் திறமையான நரம்பியல் நிபுணர்கள், குறிப்பிட்ட நினைவிழப்பு நோயை கட்டுப்படுத்த முடியுமா அல்லது முற்றிலும் குணப்படுத்த முடியுமா என்பதை தீவிரமாக ஆராய்ந்து அறிந்து சிகிச்சையளிப்பார்கள்.

எங்களுக்கு தெரியும் அதிக எண்ணிக்கையிலான நினைவிழப்பு கோளாறுகள் உள்ளன.ஆனால் அதில் அல்சைமர்ஸ் நோய் மற்றும் வாஸ்குலர் டிம்னெஸ்யாவும் பொதுவான ஒன்றாகும்.எனவே அவற்றில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்.

அல்சைமர்ஸ் நோய்

இது மூளையில் ஏற்படும் நோயாகும்.பொதுவாக முதியவர்களுக்கும், சில நேரங்களில் 40 வயதின் துவக்கத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்படும்.காலம் செல்ல செல்ல மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் இதுவும் ஒரு வளரும் நோய்தான்.இந்த நோய் மூளை நரம்புகளில் தொடர் மாற்றங்களை ஏற்படுத்தி, சிக்கலாக்கி, மற்ற நரம்புகளுடனான தொடர்பை இழக்கச்செய்துவிடும்.தீவிர நிலையில், இது அன்றாட வாழ்க்கையில் தலையிட்டு, நோயாளிகளுக்கு தங்கள் அன்றாட பணிகளில் மற்றவர்களின் உதவி தேவைப்படுமளவிற்கு கொண்டு செல்லும்.எங்கள் ஆய்வகத்தில் அல்சைமர் நோய் சிறப்பான ஆய்வுகள் மூலம் கண்டறியப்படுகிறது.எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில், பல்வேறு அனுமதிக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்துகிறோம்.அதன்மூலம் அல்சைமர் நோயை சிறப்பான முறையில் கையாள்கிறோம்.நினைவிழக்கும் நிலையை வெகுவாக குறைக்கிறோம். மருந்துகளைத்தவிர, ஏரோபிக், உடலில் சக்தியை அதிகரிக்க உதவும் உடற்பயிற்சிகள், உணர்வின்மையை குறைத்து, ஒட்டுமொத்த உணர்வுகளை மேம்படுத்துவதற்கும் தேவையானவற்றை செய்து பாதிக்கப்பட்ட நபர்களின் நலவாழ்விற்கும் உதவுகிறோம்.

வாஸ்குலர் டிமென்ஷியா

இந்த நோயும் வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான கோளாறு ஆகும்.இது நினைவிழப்பை ஏற்படுத்தி, மூளையின் மற்ற இயக்கங்களையும் பாதிக்கிறது.இது மூளையின் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது. எங்களின் பயிற்சி பெற்ற நரம்பியல் வல்லுனர்கள், ரத்த பரிசோதனை அடிப்படையில் தைய்ராய்டின் இயக்கம் மற்றும் வைட்டமின் பி12ன் அளவு ஆகியவற்றை கண்டறிந்து, அதன் மூலம் நோயின் தீவிரத்தை கண்டுபிடிக்கிறார்கள். அல்சைமர்ஸ் நோயுடள் குறைந்தளவே வேறுபடும் இந்த நோயை எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை நிபுணர்கள் சிரமப்பட்டு, துல்லியமாக கண்டறிகிறார்கள்.சிறந்த மருந்துகளை பயன்படுத்துவது, தினமும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு வகைகள் மூலம் சிறந்த சிகிச்சை முறைக்கு திட்டமிட்டு பாதிக்கப்பட்ட நபர்களை காக்கிறோம்.இதோடு தொடர்புடைய ஆபத்து காரணிகளான இதய நோய், நீரிழிவு, உயர் கொழுப்பு ஆகியவற்றை தடுக்கும் அல்லது குறைக்கு வகையிலும் எங்களின் சிகிச்சை முறை திட்டமிடப்படுகிறது.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை