இயக்குவதில் கோளாறு (தசை நோய்) சிகிச்சைகள்

இயக்குவதில் கோளாறு (தசை நோய்) சிகிச்சைகள்

இயக்குவதில் கோளாறுகள் என்றால் என்ன?

இயக்குவதில் கோளாறுகள் என்பது பெயரில் உள்ளதை போலவே தன்னிச்சையாகவும், தன்னிச்சையாக அல்லாமலும் மனிதர்களின் உடலில் உள்ள இயக்கங்களோடு தொடர்புடைய கோளாறு ஆகும்.நரம்பு மண்டலத்தின் நிலையால், அசாதாரண இயக்கங்களை ஏற்படுத்துகிறது.அது சில நேரங்களில் அதிகப்படியான இயக்கங்களை செய்யலாம் அல்லது தன்னிச்சையான அல்லது தன்னிச்சையில்லாத இரண்டு இயக்கங்களிலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

இயக்குவதில் கோளாறின் வகைகள்

இது பொதுவாக இரண்டு வகைப்படும்.

ஹைப்பர்கினட்டிக் இயக்கவதில் கோளாறுகள் – இது தன்னிச்சையல்லாத இயக்கங்களில் அதிகப்படியான இயக்கத்தையும் அல்லது மீண்டும் மீண்டும் இயங்குவதையும் குறிக்கும்.அது உடலின் மற்ற திறன்களின் வழக்கமான அளவிலும் ஊடுருவும்.

ஹைப்போகினட்டிக் இயக்கவியல் கோளாறுகள் – இயக்குவதில் ஏற்படும் பற்றாக்குறை, இயக்குவது குறைதல், மெதுவான இயக்கம், கடுமையான இயக்கம் ஆகியவற்றை குறிக்கிறது.

பார்க்கின்ஸ்சன்ஸ் நோய்

இது ஒரு நரம்பியக்கடத்தல் நோயாகும்.இது உடலின் மோட்டார் செயல்பாடுகளை பாதிக்கும்.இது பாதிக்கப்பட்டவர்களின் உடலின் இயக்கத்தை பாதித்து, நடுக்கம், உடலின் இயக்கங்களை குறைத்தல், நடையை கடினமாக்கி, உடல் விறைத்த நிலையை ஏற்படுத்துவதாகும்.இந்த சூழ்நிலையில் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை, பாதிக்கப்பட்டவர்களை காப்பதில் கவனம் செலுத்துகிறது.முதலில் முறையான நோய் கண்டறிதல், அடுத்ததாக உயர்தர இயக்க கோளாறு சிகிச்சைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன.வீரியமிக்க மருந்துகளை கொடுக்கிறோம்.அது மூளையில் டோப்பமைனின் அளவை அதிகரிக்கும்.கார்பிடோப்பா, டோப்பமைன் அகோனிஸ்ட்ஸ், மாவோபி இன்ஹிபிட்டர்ஸ் உள்ளிட்ட சில மருந்துககளை நாங்கள் இந்த நோய்க்கு பயன்படுத்துகிறோம்.சில சமயங்களின் எங்களின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஆழ்மூளை கோளாறுகளை சரிசெய்வதற்கு, சிலருக்கு அறுவைசிகிச்சையை பரிந்துரை செய்கிறார்கள்.இவற்றை தவிர உடல் சிகிச்சை எனப்படும் உடலை இயக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.அவை குறிப்பிட்ட அளவு சிகிச்சைக்கு உதவுகின்றன.எங்கள் சேவையில், தசை இறுக்கம் மற்றும் மற்ற கோளாறுகளுக்கு பொட்டுலினம் நச்சு மருந்துகளை உபயோகிக்த்தெரிந்த வல்லுனர்கள் கூட இருக்கிறார்கள்.

டிஸ்டோனியா

டிஸ்டோனியா என்பது மற்றொரு பொதுவான இயக்க கோளாறு, இதில் பாதிக்கப்பட்டவரின் தசைகள் தன்னிச்சையல்லாத இயக்கங்களை குறைத்து, மீண்டும், மீண்டும் இயக்கத்தை தூண்டுவதற்கு காரணமாக அமையும். இது மூன்று விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

  • உடலின் ஒருபகுதியை மட்டும் பாதிப்பது போக்கல் டிஸ்டோனியா
  • இரண்டு அல்லது மூன்று அருஅருகில் உள்ள உடல் உறுப்புக்களை பாதிப்பது செக்மண்டல்டிஸ்டோனியா
  • உடலின் அனைத்து பாகங்களையும் பாதிப்பது பொதுவான டிஸ்டோனியா

எந்த வகை டிஸ்டோனியா நோயாக இருந்தாலும் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது.நாங்கள் போடாக்சை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் ஊசிமூலம் செலுத்தி நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீண்டுவர உதவுகிறோம்.போடாக்ஸ் மட்டுமின்றி வீரியமிக்க மற்ற மருந்துகளையும் பயன்படுத்துகிறோம்.அது மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளை வழக்கம்போல் இயங்கச்செய்கிறது.இதன் மூலம் இந்நோய் தடுக்கப்படுகிறது.சிகிச்சை மற்றும் தீவிரமான நிலையில் அறுவைசிகிச்சை என எங்கள் சேவைகள் விளங்குகிறது.

எங்களின் சேவைகள்

எண்ணிலடங்கா இயக்குவதில் கோளாறு நோய்கள் உள்ளன.அவை எல்லாவற்றிற்கும் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது.அதில் பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் டிஸ்டோனியா ஆகியவற்றின் மீது சிறப்பு ஆர்வம் காட்டப்படுகிறது.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை