தண்டுவட மரப்பு நோய் (நரம்பு சேதம்) சிகிச்சை

தண்டுவட மரப்பு நோய் (நரம்பு சேதம்) சிகிச்சை

Multiple sclerosis எனப்படும் தண்டுவட மரப்பு நோய் என்றால் என்ன?

இது மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதித்து, மூளையையும், தண்டுவடத்தையும் முடக்கக்கூடியது. இந்த நோயில் உடலின் நோய் எதிர்ப்புத்திறன், மைலின் எனப்படும் நரம்பை காக்கும் பாதுகாப்பு உறையை தாக்கி, மூளைக்கும், உடலின் மற்ற பாகங்களுக்கும் இடையே  தொடர்கொள்வதில் சிக்கலை அதிகரித்துவிடுகிறது. இறுதியில், நரம்பை சேதப்படுத்தி, அந்த சேதத்தை நிரந்தரமாக்கிவிடுகிறது.

இந்த தண்டுவட மரப்பு நோயின் அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.நரம்பில் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவைப்பொறுத்தும், எந்த நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்தும் அறிகுறிகள் ஏற்படும்.பொதுவான சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவீன உணர்வு அல்லது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டமூட்டுகளில் உணர்வின்மை ஏற்படும். ஒரு நேரத்தில் உடலின் ஒரு புறத்தில் மட்டுமே இது தோன்றும். கால்களும் பாதிக்கப்படலாம்.
  • பார்வை இழப்பு ஏற்படலாம். பகுதி பார்வையிழப்பு அல்லது பொதுவாக ஒரு கண்ணில் பார்வையிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கண்களை இயக்கும்போது வலி ஏற்படுவதோடும் இது தொடர்புடையது.
  • நீண்ட காலத்திற்கு இரட்டை பார்வை ஏற்படலாம்.
  • உடலின் பல பகுதிகளிலும் வலி அல்லது கூச்ச உணர்வு ஏற்படலாம்.
  • கழுத்தை வளைக்கும்போது மின்சாரம் தாக்கிய உணர்வு ஏற்படும். குறிப்பாக கழுத்தை முன்புறம் வளைக்கும்போது இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.
  • ஒருங்கிணைந்து செயல்படுவதில் இழப்பு ஏற்படலாம். நடையில் தள்ளாட்டம் மற்றும் முடக்கம் ஆகியவை ஏற்படலாம்.
  • பேசுவதில் தடுமாற்றம் அல்லது உளறி பேசுவது.
  • அதிக சோர்வு அல்லது மயக்கம்.
  • சிறுநீர்ப்பை மற்றும் குடல் இயங்குவதில் சிக்கல்.

தண்டுவட மரப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இதுவரை மருத்துவ அறிவியலுக்கே மர்மம்தான்.அடிப்படையில் இது autoimmune எனப்படும் தன்னுடல் தாங்குதிறன் நோயாகவே கருதப்படுகிறது.அதாவது உடலின் நோய் எதிர்ப்பு திறனே, அதன் திசுக்களை தாக்குகிறது.தண்டுவட மரப்பு நோயில் நோய் எதிர்ப்பு திறன் வழக்கமாக செயல்படாது.இதனால் நரம்பு காப்புறைகளில் அழிவு ஏற்படுகிறது.நரம்பு நார்கள் வழியாக செல்லும் தகவல்கள் அழிக்கப்பட்டு, இறுதியில் நரம்பு முழுவதும் சேதப்படுத்தப்படும்.ஒரு சிலர் தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்படுவதற்கும், ஒரு சிலர் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் தெளிவான காரணங்கள் தெரியவில்லை.மரபணுக்களின் சேர்க்கையால் இருக்கலாம் அல்லது சில சுற்றுச்சூழல்களும் மனிதர்களுக்கு தண்டுவட மரப்பு நோயை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

எங்கள் மருத்துவமனையின் பராமரிப்பு பணிகள்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் தண்டுவட மரப்பு நோயின் உயர்தர மருத்துவக்குழுவினர், பலதுறை சார்ந்த வல்லுனர்களுடன் இணைந்து பணிசெய்து, நோயின் தீவிரத்தை சரியாக மதிப்பீடு செய்து, ஒவ்வொரு நோயாளிக்கும் சிறப்பு சிகிச்சையளிக்கப்படுகிறது. எங்களுக்கு தெரியும் இதை முழுமையாக குணப்படுத்த முடியாது என்று, ஆனாலும் எங்களின் நிபுணர்கள் குழு, அறிகுறிகளை ஓரளவிற்கு குறைத்து, பாதிக்கப்பட்ட நபர் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வார்கள். எங்களின் உயர்ந்த திறன்கொண்ட மருத்துவர்கள் சிகிச்சைக்கு மிகமுக்கியமான உறுதுணையாக உள்ள நோயின் தீவிரத்தை துல்லியமாக கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சபட்ச பயனுள்ள சிகிச்சையை வழங்குவார்கள். மேலும் எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் அதிகளவு நவீன நுட்பங்களை திறமையாக பயன்படுத்தி, மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளை கையாண்டு, புதிய சிகிச்சை முறைகளை அதிகரித்து, தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒட்டுமொத்த வெளிப்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். பீட்டா இன்டர்பெரான்ஸ் உள்ளிட்ட புதிய சிசிக்சை முறைகளையெல்லாம் சிறப்பான முறையில் பயன்படுத்துகிறோம்.அதேநேரத்தில் தண்டுவட மரப்பு நோய்க்கு சிறப்பான சிகிச்சையளிக்கும் வகையில், புதிய மருந்துகளையும் பயன்படுத்துகிறோம்.எங்கள் மருத்துவமனை புதிய தொழில்நுட்பங்களையும், மருத்துவ அறிவியல் வளர்ச்சியையும் கணிசமான அளவு பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சையளித்து வருகிறது.இதனால் நோயாளிகளும், அவரின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைகின்றனர்.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை