நரம்பியல் அவசரசிகிச்சை பிரிவு என்றால் என்ன?
நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு என்பது நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு என்று அழைக்கப்படுகிறது.இது சிறப்பு மருத்துவ பராமரிப்பு அல்லது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மனித நரம்பியல் மண்டல நோய்களுக்கான சிகிச்சை வசதியாகும்.நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு என்பது முற்றிலும் வித்யாசமான ஒன்றாகும்.அதன் நோக்கம் மூளை, தண்டுவடம் மற்றும் ஒட்டுமொத்த நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்னைகளை கண்டுபிடித்து, தடுத்து, சிகிச்சையளிப்பதாகும்.இந்த துறையில் கவனம் செலுத்தும் மருத்துவர்கள் நியூரோஇன்டன்சிவிஸ்ட்ஸ் என்று அழைக்கப்படுவார்கள்.அதேநேரத்தில் அவர்கள் நரம்பியல், அவசர சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை அல்லது உணர்வு நீக்க மருந்தியல் ஆகியவற்றில் போதிய அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
எங்கள் நரம்பியல் அவசர சிகிச்சை குழு
எங்கள் மருத்துவமனையில் மிகவும் திறமையான மற்றும் பரந்த அறிவு மற்றும் அனுபவமுள்ள நபர்களே அவசர சிகிச்சை பிரிவு குழுவில் உள்ளனர்.நரம்பியல் குறைபாடுகளுடன் வரும் நபர்களுக்கு சிறப்பான சிகிச்சையளிப்பதையே அவர்களின் நோக்கமாக கொண்டுள்ளனர்.இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியுடன் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுகிறது.அதில் பின்வருபவைகளும் அடங்கியுள்ளன.
இந்த அனைவரின் ஒத்துழைப்போடு எங்களின் மருத்துவமனை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது.அதன் மூலம் அவர்கள் விரைவாகவும், உத்வேகத்துடனும் குணமடைவார்கள் என்பது உறுதி.
நாங்கள் என்ன வழங்குகிறோம்?
எங்கள் மருத்துவமனையின் நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு கீழ்காணும் நரம்பியல் சிகிச்சைகளை சிறப்பாக மக்களுக்கு வழங்கிவருகிறது.
கடுமையான வலிப்பு கோளாறு - மூளையில் திடீரென ஏற்படும் ஒருங்கிணைக்கப்படாத மின் அதிர்வாகும். அது ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் சோடியத்தின் அளவு குறைவாக இருப்பது, மூளை தொற்று, மூளையில் ஏற்பட்ட காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.வலிப்பு என்பது குழந்தையில் தொடங்கி, காரணமின்றி வலிப்பு ஏற்படுவதாகும்.நாங்கள் இவ்விரண்டையும் முடிவுக்குகொண்டுவர சிறப்பான சிகிச்சையளிக்கிறோம்.
தொடர் வலிப்பு – இது மற்றொரு மிகவும் அபாயமான கை– கால் வலிப்பாகும்.5 நிமிடத்திற்கும் மேலாக தொடர்ந்து இருக்கும்.ஒரு வலிப்பு 5 நிமிடம் தொடரும் அல்லது 5 நிமிட இடைவேளையில் 2 அல்லது 3 முறை வலிப்பு ஏற்படும்.இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரால் இயல்பு நிலைக்கு திரும்பவே முடியாது.ஆனால் இதற்காக நீங்கள் கவலைகொள்ள தேவையில்லை.ஏனெனில் எங்களின் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள் உங்களுக்கு சேவை செய்வதற்காக காத்திருக்கிறார்கள்.அவர்கள் உங்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவார்கள்.
பக்கவாத பராமரிப்பு:
ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படும் பக்கவாதம்: ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால், இந்த பக்கவாதம் ஏற்படுகிறது. அது திரோம்போடிக் அல்லது எம்போலிக் என இரண்டு வகைகளாக இருக்கலாம்.திரோம்போடிக், மூளையில் உள்ள தமனிகளில் ஏற்படும் நோய் காரணமாக ஏற்படுகிறது.எம்போலிக், கழுத்து அல்லது இதயத்தில் உள்ள ரத்த குழாய்களில் கட்டி ஏற்படுவதால் வருகிறது.நாங்கள் இவ்விரண்டு நிலை பக்கவாதங்களையும் சமாளிக்கும் அளவிற்கு தேவையான கருவிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வழங்குகிறோம்.
பெருமூளை உள்ளே ரத்தக்கசிவு எனப்படும் Intra-Cerebral Hemorrhage(ICH):இது மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவால் ஏற்படுகிறது. இது பொதுவாக கட்டுப்படுத்த முடியாத ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.மூளையில் எவ்வளவு ரத்தகசிவு ஏற்படுகிறதோ அந்தளவிற்கு இதன் கடுமைதன்மை காணப்படும்.இது மிக அதிகமான நோய் தன்மையையும், இறப்பையும் ஏற்படுத்தும்.தீவிரமான நிலை ஏற்பட்டால், உடனடியாக அறுவைசிகிச்சை செய்யவேண்டும்.
சப் அராக்னாய்டு பகுதியில் ரத்தக்கசிவு: மூளையை மூடியுள்ள பகுதிக்கும் அடுத்து காணப்படும் சப் அராக்னாய்ட் பகுதியில் ஏற்படும் ரத்தக்கசிவால்,பொதுவாக இவ்வகை நோய் ஏற்படுகிறது. இந்த நோயின் கடுமை 1 முதல் 4 வரை என்று வகைப்படுத்தப்படுகிறது.ஆரம்பத்திலேயே சிகிச்சையளித்தாலும், முற்றிய நிலையில் பின்னால் ஏற்படும் கோளாறுகளை முன்னரே கணிக்க முடியாமல் போகலாம்.அறுவைசிகிச்சை அல்லது எண்டோவாஸ்குலர் காயிலிங் ஆகிய இரண்டில் ஒன்று தேவைப்படும்.இவ்விரு மருத்துவ வசதிகளும் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் உள்ளது.
சப் டியூரல் பகுதியில் ரத்தக்கசிவு: இது வயதானவர்களுக்கும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுவாக ஏற்படும். இதன் விளைவாக மூளை இடமாறிவிடும் மற்றும் மருத்துவ அறிகுறிகள் தோன்றும்.வயதானவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்படும்போதுகூட இந்த பாதிப்பு ஏற்படும்.இதற்கு முக்கியமாக அறுவைசிகிச்சை செய்துகொள்வதே சிறந்தது.எங்களின் டாக்டர்.வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் இதில் நிறைய அனுபவம் உள்ளது.
கோமா- மயக்க நிலையில் எவ்வித தூண்டுதலுக்கும் பதிலளிக்காமல், தானாக எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கும் கோமா நோயாளிகளை எங்கள் மருத்துவர் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள்.
வளர்சிதை மாற்ற என்சிபேலோபதீஸ்: இது ஒரு நரம்பியல் தொடர்புடைய நோயாகும். உடலுக்கு தேவையான தண்ணீர், வைட்டமீன்கள், எலக்ட்ரோலைட்கள் மற்றும் மற்ற வேதியல் பொருட்களின் அளவில் ஏற்படும் வித்யாசங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவது.எங்களின் நரம்பிய மருத்துவக்குழு, இந்த ஏற்றத்தாழ்வுகளை கண்டறித்து, அவற்றை சரிசெய்து, மூளையின் இயக்கத்தை இயல்பாக்குவார்கள்.
ஆட்டோஇம்யூன் என்செபாலிடிஸ்: உடலின் நோய் எதிர்ப்புத்திறன் மூளையின் ஆரோக்கியமான செல்களை தாக்கும்போது ஏற்படுகிறது. இதனால் பல்வேறு வகையான நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றன.
மூளைக்காய்ச்சல் அல்லது என்செபாலிடிஸ்: மூளையின் சவ்வுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்றால் தண்டுவடத்தில் வீக்கம் ஏற்படுவதாகும். எங்களின் அனுபவமிக்க நரம்பியல் வல்லுனர்கள், தொற்றை கண்டுபிடித்து, வீக்கத்தை குறைத்து, நோயாளியை குணமடையச்செய்கின்றனர்.
இயக்க கோளாறுகள் அல்லது பர்கின்சன்ஸ்சின் நோய் அவசரங்கள்: அதிகப்படியான இயக்கங்கள் அல்லது குறைவான இயக்கங்கள் விரும்பி அல்லது விருப்பமின்றி செய்யப்படும் இயக்கங்கள் நரம்பியல் தொடர்பான கோளாறுகளால் ஏற்படுகிறது. அனைத்து வகையான இயக்குவதில் சிக்கல் உள்ள கோளாறுகளுக்கும், குறிப்பான பர்கின்சன்சின் நோய்க்கும் சிகிச்சையளிக்கிறோம்.இதன் மூலம் நோயாளிகளின் உடல் இயக்கங்களை எளிதாக செய்ய முடிகிறது.
தலையில் அதிர்ச்சி அல்லது நியூரோவாஸ்குலர் அதிர்ச்சி- எங்களின் நரம்பியல் அவசரசிகிச்சை பிரிவு, வெளிக்காயத்தால் ஏற்பட்ட அனைத்து வகையான தலை தொடர்பான அதிர்ச்சி அல்லது நியூரோவாஸ்குலர் அதிர்ச்சிக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.
எங்கள் மருத்துவமனையின், நரம்பியல் அவசர சிகிச்சைப்பிரிவு, மூளையின் அனைத்து வகையான நரம்பியல் நோய்கள், தண்டுவட பாதிப்புகள் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள புற நரம்பியல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கிறது.
இதன் மூலம் எங்கள் மருத்துவமனை அதிக தரம் வாய்ந்த நரம்பியல் அவசர சிகிச்சையை, அவசர நரம்பியல் நிலைகளுக்கு வழங்குகிறது என்பது தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.ஏதேனும் நரம்பியல் தொடர்பான அவசர சிகிச்சைகளுக்கு எங்களை உடனடியாக தொடர்புகொள்வது, உங்களை நாங்கள் சிறந்த முறையில் கவனித்துக்கொள்ள உதவும்.
இதை எழுதியவர் டாக்டர். சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்
மருத்துவரை கேளுங்கள்
இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்