நரம்பு மண்டல நோய்கள்

நரம்பு மண்டல நோய்கள்

நரம்பு மண்டல நோய்கள்( Nervous System Diseases)

நரம்பு மண்டல நோய்கள் அல்லது நரம்பியக்கடத்தல் நோய்கள் என்றால் என்ன?

நரம்பு மண்டல நோய்கள் அல்லது நரம்பியக்கடத்தல் நோய்கள் என்பது இயற்கையிலேயே பல்வேறு வகையான நரம்பியல் நோய்கள் வளர்ந்து வருவதாகும்.மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தின் வெவ்வேறான இடங்கள் மெல்ல மெல்ல நரம்பணுக்களை இழந்து வருவதே இந்த நோயாகும்.நரம்பு செல்கள் அல்லது நரம்பணுக்கள் ஆகியவை அவற்றின் இயக்கத்தை இழந்து, சில நாட்களில் அழிந்துவிடும்.நரம்பியக்கடத்தல் நோய்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படும்.ஆனால் வயது அதிகரிக்கும்போது நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.இதன் மூலம் நரம்புணுக்களின் அமைப்பும், இயக்கமும் மெதுவாக சிதைவது தெளிவாக தெரிகிறது.எனவேதான் இந்த நோய்கள் மெல்ல வளர்ந்துவரும் நோய்களாக இருக்கின்றன.இந்த நரம்பியக்கடத்தல் நோய்கள் வளர்ந்து வரும் இயல்பிற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.எனினும், பொதுவான வீக்கத்தை ஏற்படுத்தும் நுட்பமே இதன் வளரும் இயல்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நரம்பியக்கடத்தல் நோய்கள் ஏற்பட காரணங்கள்?

நரம்பியக்கடத்தல் நோய்கள் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இதுவரை சரியாக தெரியவில்லை.ஒருவரின் மரபணுக்கள் மற்றும் அவர்கள் வாழும் சூழ்நிலைகளைப் பொறுத்து அவருக்கு நரம்பியக்கடத்தல் நோய்கள் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.ஒருவரின் மரபணுக்கள் ஏதேனும் ஒரு நரம்பியக்கடத்தல் நோய்க்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தால், இது ஏற்படும்.இந்த மரபணுக்கள் ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கு ஆட்பட நேரிட்டால், இதுபோன்ற நரம்பியக்கடத்தல் நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

 • பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் உணவுப்பொருட்களை பயன்படுத்துவது மற்றும் பூஞ்சை பாதிப்பு
 • மாங்கனீசு, ஆர்சானிக், ஈயம் போன்ற உலோகங்களும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.
 • தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் மற்றும் நுகர்வு பொட்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள்.
 • அதிகப்படியான காற்று மாசுபாடு.
 • பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் நச்சுகள் போன்ற உயிரியல் காரணங்கள்.
 • உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணிகள், மது, புகைப்பழக்கம் உள்ளிட்டவைகளும் இந்த நோய் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.

முறையான நோய் கண்டறிதல், படிப்படியாக சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதை எங்களின் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் நாங்கள் பின்பற்றுகின்றோம்.அதுவே எங்கள் நோயாளிகள் விரைவில் குணமடைவதற்கு காரணமாகிறது.

நரம்பியக்கடத்தல் நோய்களின் அறிகுறிகள்

இந்த நரம்பியக்கடத்தல் நோய்களை நல்ல முறையில் கையாள்வதற்கு, அறிகுறிகளை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் போதிய பயிற்சி பெற்ற மற்றும்  சிறந்த அனுபவமுள்ள நரம்பியல் மருத்துவ குழுவினர், நோயாளியின் ஒவ்வொரு அறிகுறியையும் கேட்டறிந்து தரமான சிகிச்சையை வழங்கி அவர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். பொதுவான பழக்கவழக்கம், உடல் மற்றும் மனநிலை சார்ந்த நிலைகளில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள் தெளிவாக நரம்பியக்கடத்தல் நோய்களை குறிக்கிறது.அதுகுறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

 • நினைவு கோளாறுகள், மறதி, பேசுவதில் கடினம் மற்றும் வார்த்தைகள் உச்சரிப்பதில் சிரமம் ஏற்படுவது.
 • உணர்ச்சியின்மை என்பது பொதுவான அறிகுறியாகும்.அது நோயாளிகள் தங்களின் அன்றாட பணிகளை செய்வதிலேயே சிரமத்தை ஏற்படுத்தும்.
 • உடலின் பல இடங்களில் விறைப்பான அல்லது இறுக்கமான தசைகள் இருப்பதும் மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.அதுவும் நரம்பியக்கடத்தல் நோய் ஏற்படுவதை குறிக்கிறது.
 • தள்ளாடி நடப்பதும் பொதுவான அறிகுறியாகும்.
 • பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் பதற்றம் மற்றும் மனஅழுத்தம் ஆகிய இரண்டு பொதுவான அறிகுறிகளும் தென்படும்.
 • பேசுவதில் மாற்றம் மற்றும் அசாதாரணமான உணர்ச்சிகளும் பொதுவான அறிகுறிகளேயாகும்.
 • மூட்டு அல்லது ஒரு விரலில் ஒரே நேரத்தில் தன்னிச்சையில்லாத நடுக்கம் ஏற்படுவது நரம்பியக்கடத்தல் நோய்க்கான அறிகுறிகளாகும்.
 • விளக்கிக்கூறமுடியாத சோர்வும் மற்றொரு அறிகுறியாகும்.

எங்களின் சேவை

எங்களின் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில், நிரம்பியக்கடத்தல் நோய்கள் அல்லது நரம்பு மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது.நாங்கள் சிகிச்சையளிக்கும் சில பொதுவான நரம்பியக்கடத்தல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 • அல்சைமர்ஸ் நோய் மற்றும் மற்ற மறதி நோய்கள்.
 • பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் அதுதொடர்பான பல்வேறு நோய்கள்
 • பிரயான் நோய்
 • முதுகெலும்பு தசைநார் சிதைவு
 • ஸ்பைனோ செரிபெல்லர் அட்டாக்சியா
 • ஹன்டிங்டனின் நோய்

சிறந்த மருத்துவமனையான டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை நரம்பியக்கடத்தல் நோய் அல்லது நரம்பு மண்டல நோய்களுக்கு, அறிகுறிகளின் அடிப்படையில் சிறந்த தீர்வை வழங்குகிறது.நரம்பியல் அவசர சிகிச்சை மையம் அனைத்து வகையான நரம்பியக்கடத்தல் நோய்களையும் வல்லுனர்கள் குழுவினர்களின் துணையுடன், சிறந்த முறையில் கையாள்கிறது.இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எவ்வித சிரமுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை