எங்கள் சிறப்புகள்

எங்கள் சிறப்புகள்

பக்கவாத சிகிச்சைக்கு தீவிர கண்காணிப்பு பிரிவு

பக்கவாத சிகிச்சை பிரிவு என்றால் என்ன?

பக்கவாத சிகிச்சை பிரிவு என்பது பக்கவாத மீட்பு மையம். அங்கு சிறப்பு செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மருத்துவக்குழுவினர் குறிப்பாக பக்கவாத நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீவர பக்கவாத சிகிச்சை பிரிவு, உண்மையில் தீவிர நரம்பியல் பிரிவாகும்.இங்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.இது அவசர சிகிச்சை பிரிவாகும்.இங்கு பக்கவாத நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கப்படுகிறது.இதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், பக்கவாதத்தில் இருந்து விடுபடவும் வழிவகுக்கிறது. நமது பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவில், நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள், பக்கவாத சிறப்பு நிபுணர்கள், நரம்பியல் மயக்கவியல் நிபுணர்கள், மறுவாழ்வு சிகிச்சையளிப்பவர்கள், தீவிர சிகிச்சை செவிலியர்கள் மற்றும் நியூரோஇண்டன்சிவிஸ்ட்ஸ் உள்ளிட்ட குழுவினர் 24 மணிநேரமும் இயங்கிவருகின்றனர். அவர்கள் அனைத்து வகையான பக்கவாத அவசரசிகிச்சைகளையும் சிறப்பாக கையாண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்றனர்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வது எப்படி?

எங்களின் பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு பக்கவாத நோயாளிகளை சிறப்பாக கவனித்துக்கொள்கிறது.நோயால் பாதிக்கப்பட்ட நபர் வந்தவுடனே நோய்க்கான காரணம் சோதிக்கப்படுகிறது.தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவை உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சைகளை தாமதமின்றி துவங்கப்படுகின்றன.

திசுக்களின் அழிவால் பக்கவாதம் ஏற்பட்டால் (ரத்தம் உறைவதால், ரத்த குழாய்களில் அடைப்பு எற்பட்டால்) அந்த உறைவை எவ்வளவு முடிமோ அவ்வளவு விரைவில் கரையச்செய்வது அல்லது அகற்றுவதே சிகிச்சையின் நோக்கமாகும். அதன்மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்படும்.

ஐவி திரோம்போலிசிஸ்

இது நரம்பு வழியாக செலுத்தப்படும் திரோம்போலிடிக்ஸ் சிகிச்சை.மணிக்கட்டில் போடப்பட்டுள்ள ஐவி குழாய் வழியாக ஊசி மூலம் மருந்தை செலுத்தி ரத்த உறைவை கரைப்பது.தென்னிந்தியாவிலே இந்த சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் மிகச்சிறப்பாக செய்யப்படுகிறது.

ஐஏ திரோம்போலிசிஸ்

இந்த முறையில் நோயாளிக்கு கேத் ஆய்வகத்தில் சிகிச்சையளிக்கப்படும்.இடுப்பிலிருந்து, ஒரு நீண்ட குழாய் மூளைக்கு செலுத்தப்படும்.பின்னர், அது அடைத்திருக்கும் தமனியை அருகில் வரை மருந்து செலுத்தப்படும்.அந்த மருந்து ரத்த உறைவை கரைக்கும்.இந்த முறையில் குறைவான அளவு மருந்தே ரத்த உறைவை கரைக்க போதுமானது.எங்கள் மருத்துவர்கள் இந்த முறையில் சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுகின்றனர்.

மெக்கானிக்கல் திரோம்பேக்டமி

இந்த முறை சிகிச்சையும் கேத் ஆய்வகத்திலேயே செய்யப்படுகிறது.ஸ்ரென்டிவர்ஸ் என்ற சிறப்பான கருவியை பயன்படுத்தி இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.சாலிடைர் மற்றும் டிரிவியோ என்ற கருவிகளை பொதுவாக பயன்படுத்துகின்றனர்.இந்த கருவிகளை ரத்தம் உறைந்துள்ள இடங்களில் செலுத்தி அந்த உறைவை அப்படியே வெளியே இழுத்து வெளியேற்றி சிகிச்சையளிக்கின்றனர்.இதை பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

 

நரம்பியல் தீவிர சிகிச்சைக்கு சிறப்பான நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு

நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு என்றால் என்ன?

நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு, குறிப்பாக, உயிருக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடிய, நரம்பியல் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக செயல்படுகிறது.நரம்பியல் அவசர சிகிச்சை என்ற கருத்து 25 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.தீவிர நரம்பியல் கோளாறு உள்ளவர்களுக்கென்று சிறப்பு சிகிச்சையளிப்பதற்காக நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டது.நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வளர்ந்துவரும் பல்வேறு நுட்பங்களால் இது சாத்தியமானது.

எங்களின் சிறப்புகள்

 

எங்கள் மருத்துவமனையின் நரம்பியல் அவசரசிசிக்சை பிரிவு, உயர்தர நரம்பியல் மருத்துவ சேவையை சாதாரண நோயாளிகளுக்கும், அவசர சிகிச்சையளிக்க வேண்டிய நோயாளிகளுக்கும் வழங்குவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்க்ப்பட்டுள்ளது. எங்கள் நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் வசதிகளுடன் 16 படுக்கைகள் உள்ளது. இதனால் எங்களால் எல்லா வகை அவசர நரம்பியல் பிரச்னைகள் மற்றும் அறுவைசிகிச்சை அவசரங்களையும் எளிதாகவும், சிறப்பாகவும்  கையாள முடியும். பல துறை வல்லுனர்களையும் சேர்த்தே நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு. நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் அவசரசிகிச்சை பிரிவு சிறப்பு வல்லுனர்கள் ஆகிய அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறப்பு பயிற்சி பெற்ற, அனுபவமிக்க செவிலியர்கள், சுவாச சிகிச்சை நிபுணர்கள், ஊட்டத்து நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி, நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கின்றனர்.

இதுபோல் பலதுறை நிபுணர்கள் ஒரே நேரத்தில் இருப்பதன் முதன்மை நன்மையே, எங்களின் ஒவ்வொரு நோயாளிக்கு பலதுறை வல்லுனர்களின் அறிவுரைகளையும் கேட்டு சிறப்பான சிகிச்சையளிக்க முடியும். இதனால் அவசர உதவிகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்கிறது.எங்களின் நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவில் தரமான மற்றும் மிகுந்த அனுபவமிக்க மருத்துவர்கள் குழுவினர் மற்றும் சிறப்பு தொழில்நுட்பங்களும் உள்ளது.அதன் மூலம் தீவிரி சிகிச்சைபிரிவில் உள்ள நோயாளிகளை சிறப்பான முறையில் கவனிக்க முடியும்.

நிர்வகிக்கும் பிரச்னைகள்

எங்கள் மருத்துவமனையில் உயர்தர நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது.அதன் மூலம் அனைத்து வகையான நரம்பியல் பிரச்னைகளையும், அது தொடர்பான பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் எளிதாக கையாள முடியும்.நாங்கள் அதிக எண்ணிக்கையிலான நரம்பியல் பிரச்னைகள் எங்கள் மருத்துவ குழுவினரால் செய்யப்படுகிறது.சில முக்கிய பிரச்னைகளை மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கிறோம்.எங்கள் நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவில் வழங்கப்படும் வசதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 • மூளை கட்டி
 • தீவிர இஸ்கிமிக் பக்கவாதம்
 • அதிர்ச்சியில் மூளை காயம்
 • குல்லியன் பர்ரே நோய்
 • சப்அராக்னாய்ட் ரத்தக்கசிவு
 • அகச்சிதைவு ரத்தக்கசிவு
 • முதுகெலும்பு அதிர்ச்சி
 • சப்டியூரல் ஹீமட்டோமா
 • மூளை வீக்கம்
 • தொடர் வலிப்பு
 • மூளைக்காய்ச்சல்
 • நியூரோவாஸ்குலர் அதிர்ச்சி
 • கோமா
 • தீவிர வலிப்பு கோளாறு
 • தலையில் அதிர்ச்சி

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர பல்வேறு தொற்றுகள் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் மற்ற கோளாறுகள், எங்கள் நரம்பியல் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் எங்கள் சிறப்பு நரம்பியல் குழுவினரால் நன்றாக சிகிச்சையளிக்கப்படுகிறது. எங்கள் சிறப்பு நரம்பியல் மருத்துவர் குழு மற்றும் நரம்பியல் அவசரசிகிச்சைப்பிரிவு 24ம் நரம்பியல் அவசரசிகிச்சைப்பிரிவு 24X7 என்ற அடிப்படையில் இயங்குகிறது.எந்த நேரத்தில் நீங்கள் நரம்பியல் அவசரங்களை சந்திதாலும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் உடனடியாக சிகிச்சையளிக்கப்படும்.எங்களின் அவசர உதவி எண்ணை அழைத்தால் மற்ற அனைத்தையும் எங்கள் ஊழியர்கள் சிறந்த முறையில் கவனித்துக்கொள்வார்கள்.

 

மூளையை ஸ்கேன் செய்வதற்கான நரம்பியல் இண்டர்வென்ஷனல் கேத் லேப்

நரம்பியல் இண்டர்வென்ஷனல் கேத் லேப் என்றால் என்ன?

நியூரோ இண்டர்வென்ஷனல் கேத் ஆய்வகம், நரம்பியல் நோய்கண்டறிதல் மையம், குழாய் ஆய்வகமாகும். அங்கு நோய் கண்டறிவதற்கு தேவையான படம் பிடிக்கும் கருவிகள், குறிப்பாக தண்டுவடம், தமனிகள், நரம்புகள் மற்றும் மூளையின் மற்ற வாஸ்குலர் சிதைவுளை படம்பிடிக்க உதவும் கருவிகளும் இருக்க வேண்டும். எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் நரம்பியல் கேத் ஆய்வகம் தேவையான அனைத்து வகையான உட்கட்டமைப்பு வசதிகளுடன், நோயாளிகளுக்கு சிறந்த தரம் வாய்ந்த சிகிச்சை வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது.

நாங்கள் என்ன வழங்குகிறோம்

மாவட்டத்திலேயே எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில்தான் முழுவதும் நன்றாக இயங்கக்கூடிய கேத் ஆய்வகம் உள்ளது.அங்கு அனைத்து வகையான நரம்பியல் நோயாளிகளுக்கும் மிகச்சிறப்பான சிகிச்சையும் வழங்கப்படுகிறது.ஷிமாட்சு என்ற கருவி உள்ளது.கேத் ஆய்வகமும், பிரஷர் இன்ஜெக்டர் மற்றும் அதிநவீன மயக்கவியல் இயந்திரங்கள் உள்ளிட்ட நவீன மற்றும் புதிய இயந்திரங்களுடன் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக இயங்கக்கூடிய, நவீன கருவிகள் கொண்ட இந்த கேத் ஆய்வகம் மூலம், எங்கள் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் குழுவினர் எண்ணிலடங்கா பல்வேறு நரம்பியல் இண்டர்வென்ஷனல் மற்றும் பெருமூளை வாஸ்குலர் இண்டர்வென்ஷனல் சிகிச்சைகளை நோயாளிகளுக்கு செய்துவருகின்றனர். அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஐஏ திரோம்போலிசிஸ் – உள் தமனி திரோம்போலிசிஸ் அல்லது ஐஏ திரோம்போலிசிஸ் சிகிச்சை எங்கள் கேத் ஆய்வகத்தில் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது. தீவிர இஸ்கிமிக் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சிறப்பாக பயன்படுகிறது.இதில் ரத்தம் உறைந்துள்ள இடத்தில் ஊசி முலம் மருந்து செலுத்தப்பட்டு, அந்த உறைவு கரைக்கப்படுகிறது.

மெக்கானிக்கல் திரோம்பேக்டோமி – இது எங்கள் கேத் லேப்பில் செய்யப்படும் மற்றொரு முறையாகும். அண்மையில் தீவிர பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செய்யப்படும் சிகிச்சையாகும்.ரத்தக்குழாயில் அதிகளவிலான அடைப்பு ஏற்படும்போது செய்யப்படும் சிகிச்சையாகும்.

கரோடிட் மற்றும் முதுகெலும்பு தமனி மற்றும் அகச்சிதைவு தமனி ஸ்டென்டிங் – மூளைக்கு ரத்தம் வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள கரோடிட் தமனி குறுகலாக இருந்தால், அதை திறப்பதற்கு ஸ்டென்ட் எனப்படும் ரத்தக்குழாய்க்குள் தற்காலிகமாக வைக்கப்படும் ஒரு குழாய் ஆகும். அது ரத்தக்குழாய் நன்றாக திறப்பதற்கோ அல்லது தடையை அகற்றுவதற்கோ உதவும்.இந்த முறையை எங்கள் நிபுணர்கள் சிறிய பலூன் மற்றும் உலோகத்தை பயன்படுத்தி செய்வார்கள்.

ரத்த நாள நெளிவு காயிலிங் – எங்களின் அனுபவமிக்க மருத்துவர்கள், கேத் ஆய்வகத்தில் செய்யும் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையாகும். ரத்த குழாயில், மெல்லிய உலோக கம்பியை பயன்படுத்தி  சுருள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி மூளையில் ஏற்பட்டுள்ள ரத்த தடையை நீக்கி, ரத்த ஓட்டம் சீராக வழிவகுக்கிறது. ரத்தநாள நெளிவு என்பது மூளையின் தமனி சுவர் வீங்குவது அல்லது பலவீனமடைவதாகும்.அது அடைக்கப்படாமல் இருந்தால் வெடித்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

ஏவிஎம் எம்போலைசேசன் – ஏவிஎம் என்பது, தமனிகளுக்கும், நரம்புகளுக்கும் இடையே இயல்பற்ற தொடர்பு ஏற்படுவதாகும்.ஏவிஎம் எம்போலைசேசன் என்பது எங்கள் கேத் ஆய்வகத்தில் செய்யப்படும் சிறப்பு சிகிச்சை முறையாகும். எக்ஸ்ரே வழிகாட்டல் மற்றும் குழாய் உதவியுடன் தொடையில் இருந்து காலில் உள்ள தமனிக்கு சிசிக்சை தேவைப்படும் சரியான இடம் கண்டறியப்பட்டு, இயல்பற்ற ரத்த குழாய்கள் நீக்கப்படுகின்றன.

 

நரம்பியல் அறுசைசிகிக்சை அறை

நரம்பியல் சிகிச்சை அறை (நரம்பியல் அறுவைசிகிச்சைகள்)

நரம்பியல் அறுவைசிகிச்சை அறை என்ற பெயரே கூறிவிடும், நரம்பியல் அறுவைசிக்சிசைகளுக்கான அறை என்பதை.நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இங்கு சிக்கலான அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் நரம்பியல் சிகிச்சை அறை வழக்கமான அறுவைசிகிச்சை அறைகளிலிருந்து சிறிது வேறுபடும்.குறிப்பாக இந்த அறுவைசிகிச்சை அறையில் தேவையான கருவிகள், உபகரணங்கள் மற்றும் ஏனைய முக்கிய பொருட்கள் இருக்கும்.அது சிக்கலான நரம்பியல் அறுவைசிகிச்சைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி உதவக்கூடியவையாக இருக்கும்.

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் சிறப்பு (நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவமனை)

எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் உள்ள நரம்பியல் அறுவைசிகிச்சை அறை, முழுவதும் இயங்கக்கூடிய வகையில், எவ்வித சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எளிதாக செய்து முடிக்குமளவுக்கு தகுதிபெற்றதாக உள்ளது. நோயாளிக்கு தரமான சிகிச்சை என்பதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் அறுவைசிகிச்சை என்பதை ஒவ்வொரு நோயாளிக்கும் உறுதி செய்வதை இம்மருத்துவமனை நோக்கமாக கொண்டுள்ளது. டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் உள்ள நரம்பியல் அறுவைசிசிக்சை அறையின் சிறப்புகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

காற்றோட்டத்துடன் கூடிய, நவீன அறுவைசிகிச்சை அரங்க வசதி மருத்துவமனையில் உள்ளது. முக்கிய கருவிகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும், அப்போதுதான் தாமதமின்றியும், தங்குதடையின்றியும் அறுவைசிகிச்சையை செய்து முடிக்க முடியும். தாமதமில்லாத அறுவைசிகிச்சையும், ஒட்டுமொத்த முடிவில் முக்கியமான அங்கம் வகிக்கிறது.

நரம்பியல் அறுவைசிகிச்சை அறைகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு சிறப்பான கருவி அறுவைசிகிச்சை நுண்ணோக்கி, நரம்பியல் அறுவைசிகிச்சைக்காக டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை அக்கருவிகளை பிரத்யேகமாக உருவாக்கி வைத்திருக்கிறது. அது 40X ஐவிட திறன்வாய்ந்தது. எங்களின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள், அவற்றை சிறப்பாக பயன்படுத்தி, துல்லியமான அறுவைசிகிச்சைகளை நோயாளிகளுக்கு செய்வார்கள்.அவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்கள் நல்ல பலன்களை தரும்.

எங்கள் மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சையில் அதிவேகமாக துளையிடும் கருவி உள்ளது.மிகச்சிறிய அளவில் உள்ள இந்த கருவி கொடுக்கும் உயர்ந்த விசை அதிக எண்ணிக்கையிலான நரம்பியல் சிகிச்சைக்கு உதவுகிறது.எடை குறைவாகவும், மிகச்சிறயதாகவும் உள்ளதால், அதை பயன்படுத்துவது, சிக்கலான சிகிச்சைகள் மேற்கொள்வதற்கும், நரம்பியல் வல்லுனர்களுக்கு மிக எளிதாக உள்ளது.அதன் விசையும் தேவைக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள முடியும்.அந்த கருவியம் விரைவான அமைப்பாக உள்ளது.

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் சி ஆர்ம் கருவி கதிரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு மருத்துவ படமெடுக்கும் கருவி உள்ளது.அந்த கருவி நெகிழ்வுதன்மை கொண்டது.நரம்பியல் அறுவைசிகிச்சை அறையில் பயன்படுத்தக்கூடியது.சி வடிவில் உள்ள ஆர்ம் இருப்பதால் சி ஆர்ம் என்று குறிப்பிடப்படுகிறது.கதிரியக்க மூலம் மற்றும் கண்டுபிடிப்பான் ஆகியவற்றை இணைப்பதற்கு பயன்படுகிறது.இது வாஸ்குலர் அறுவைசிகிச்சை மற்றும் சிக்கலான நரம்பியல் அறுவைசிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.இது கதிரியக்க படங்களை உண்மை நேரத்தில் துல்லியமாகக் காட்டுகின்றன.இதனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அந்த நிலையை அறுவைசிகிச்சை நிபுணரால் பார்க்க முடியும்.

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் உள்ள உயர் தொழில்நுட்ப நரம்பியல் அறுவைசிகிச்சை அறை மூலம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எவ்வளவு சிக்கலான சிகிச்சையையும் செய்து முடிக்க முடியும்.

 

மருந்தகம்

நரம்பியல் மருந்தகம்

டாக்டர் வாஞ்சிலிங்ம் மருந்தகம்

எண். 9 கச்சேரி சாலை,

அபிராமி ஓட்டல் அருகில்,

மயிலாடுதுறை.

தொலைபேசி எண்: 04364 – 227633.

அரியலூர்

எண் 41-A, 41B மேல அக்ரஹாரம்,

கேஎம்எஸ் மருத்துவமனை எதிரில்,

அரியலூர்.

தொலைபேசி எண்: 04329 – 223633.

மன்னார்குடி

41/8, எஸ்ஏபி காம்ப்ளக்ஸ்,

நடேசன் தெரு,

மன்னார்குடி பஸ் நிலையம் அருகில்

தொலைபேசி எண்: 04367 – 226655.

பட்டுக்கோட்டை

எண். 217/2, ரயில் நிலைய சாலை,

ஏஏஏ லாட்ஜ், பட்டுக்கோட்டை.

தொலைபேசி எண்: 04373 – 255633.

திருத்துறைப்பூண்டி

எண். 253/5, எம்ஆர்வி காம்ப்ளக்ஸ்,

பஸ் நிலையம் அருகில், திருவாரூர் சாலை

திருத்துறைப்பூண்டி – 613714.

தொலைபேசி எண்: 04369 – 223633.

மருத்துவரை கேளுங்கள்

விருத்தாச்சலம்

108/B, ஆலடி ரோடு. PVG, திரையரங்கம் எதிரில்,

விருத்தாச்சலம் 

தொலைபேசி எண்: 04143 – 263200.

காரைக்கால்

MIG,1, விவேகானந்தர் தெரு, புளியங்கொட்டை ரோடு,

காரைக்கால்

தொலைபேசி எண்: 04368 – 225363.

 

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை