குழந்தை நரம்பியல்

குழந்தை நரம்பியல்

குழந்தை நரம்பியல் – பெருமூளை வாதம் சிகிச்சை

குழந்தை நரம்பியல் என்றால் என்ன?

மருத்துவத்தில் குழந்தை நரம்பியல் ஒரு சிறப்பான துறையாகும்.அது நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் பிறந்த சிசுக்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர்களின் எண்ணிலடங்கா நரம்பியல் கோளாறுகளை கையாள்கிறது. டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் சிறப்பு குழந்தைகள் நரம்பியல் துறை உயர்தரம் வாய்ந்தது மற்றும் மகத்தான அனுபவமிக்க டாக்டர்கள், குழந்தைபருவத்தின் அனைத்து வகையான நரம்பியல் கோளாறுகளையும் சிறப்பான முறையில் சரிசெய்வார்கள். குழந்தைகளுக்கு போதிய பராமரிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகை செய்யப்படும்.

எங்களின் சிறப்புகள்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை குழந்தைகளின் அனைத்து வகையான நரம்பியல் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு வழங்குகிறது.எங்கள் குழந்தை நரம்பியல் துறையின் சிறப்புகள் குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

பெருமூளை வாதம்

அடிப்படையில் பெருமூளை வாதம் என்பது இயக்குவதில் கோளாறை ஏற்படுத்துவதாகும்.வளரும் மூளையின் தசைகளின் நிலையில் ஏற்படும் சேதம், குழந்தை பிறக்கும் முன்னரே அதாவது குழந்தை தாயின் கருவில் இருக்கும்போதே ஏற்பட்டுவிடும்.மற்றொரு முக்கிய காரணம் perinatal hypoxic ischemia எனப்படும் பிறக்கும்போது ஏற்படும் மூளை சேதமும் ஆகும்.சில நேரங்களில் பிறப்பதற்கு முன்னரும் ஏற்படும்.இந்த நிலையில் போதிய அளவு ஆக்ஸிஜன் குழந்தையின் மூளைக்கு சென்று சேராது.இதனால் மூளையின் செல்கள் இறக்க நேரிடும்.அதுவும் பெருமூளை வாத நோயை ஏற்படுத்தும்.இது பெரியளவில் குழந்தையின் இயகத்தை பாதிக்கும். எங்களின் குழந்தைகள் நரம்பியல் நிபுணர்கள் குழு, மூளையை ஸ்கேன் செய்வது, எம்ஆர்ஐ, ஈஈஜி, மற்ற ஆய்வக சோதனைகள் போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்து, நோயின் தன்மையை துல்லியமாக கண்டுபிடிக்கிறார்கள். பின்னர் எங்கள் மருத்துவக்குழுவினர், பரிசோதனை முடிவுகள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் நோயின் நிலைக்கு ஏற்றவாறு, சரியான சிகிச்சையை வழங்குகிறார்கள்.இதன் மூலம் குழந்தையால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

வளர்ச்சி குறைபாடு

வளர்ச்சிக்குறைபாடு என்பது, குழந்தைகள் சரியான வயதில், சரியான உடல் மற்றும் மன வளர்ச்சியை அடைந்திராத நிலையை குறிக்கிறது. பலவீனமான பேச்சு, முறையற்ற பார்வை, இயக்குவதில் சிரமம் மற்றும் உணர்ச்சி திறன்கள் மற்றும் அறிவாற்றல் திறன்கள் ஆகிய எண்ணிலடங்கா வளர்ச்சி குறைபாடுகள் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரில் காணப்படும். அவற்றை எங்கள் குழந்தை நரம்பியல் நிபுணர்கள் சரியாக கண்டுபிடிப்பார்கள்.மருந்துகளின் நல்ல முறையில் பயன்படுத்தி, இயக்கவியல் பயற்சிகள் வழங்கி, எங்களால் முடிந்த வரை குழந்தையின் முறையான வளர்ச்சிக்கு ஆவண செய்வோம்.

மனநல குறைபாடு

இது மன நலனில் குறைபாடு அல்லது அறிவு குறைவாக இருக்கும்.இதனால் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் திறன்களில் குறைபாடு இருக்கலாம். பேசுவதில் சிக்கல், பழக்கவழக்கத்தில் குறைபாடு, நினைவுவைத்துக்கொள்வதில் சிரமம், சாதாரண பயிற்சிகளான உடை அணிதல், தானாக உணவு உட்கொள்வது மற்றும் சிந்திப்பதில் சிரமம் அல்லது பிரச்னைகளை தீர்ப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் உள்ள குழந்தை நரம்பியல் துறை மருத்துவர்கள் சரியான அறிகுறிகளையும், மனநல குறைபாடு ஏற்பட்டதற்கான காரணங்களையும் கண்டுபிடித்து, சிகிச்சையளிப்பதற்கான சிறந்த படிகளை எடுப்பார்கள். பேசும் பயிற்சி, உடற் பயிற்சி, திறன் வளர்க்கும் பயிற்சி, சிறப்பு துணை கருவிகளுடன் பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு இடையீட்டு பயிற்சிகளும் நோயாளிகளுக்கு, மருத்துவ உதவியுடன் வழங்கப்பட்டு, அவர்களின் முழு ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

கவனக்குறைவு அதிவேகத்தன்மை கோளாறு

Attention deficit hyperactive disorder or ADHDஎனப்படும்கவனக்குறைவு அதிவேகத்தன்மை கோளாறு என்பது குழந்தைகளில் ஒரு பழக்கவழக்க கோளாறு ஆகும். குறைந்த மாதத்தில் பிறந்தது, எடை குறைவாக பிறப்பது, கர்ப்ப காலத்தில் அதிகளவில் மது அருந்துதல் மற்றும் மது குடித்தல் ஆகியவற்றால், கவனக்குறைவு, உணர்ச்சிவசப்படுவது மற்றும் அதிவேகத்தன்மை போன்றவை ஏற்படுகிறுது. எங்கள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் இந்த கோளாறை சரிசெய்வதற்கு சிறந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.அதனுடன் உளவியல் சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.அது அறிவாற்றல் பழக்கவழக்க சிகிச்சையையும் கொண்டது.அது மிக உதவியாக உள்ளது.மேலும் பெற்றோர்களுக்கு தேவையான அறிவுரைகளும், நோய் பாதிப்பு குறித்தும் விளக்கப்படுகிறது.இதன் மூலம் அவர்கள் பிரச்னையை சிறப்பாக கையாள முடியம்.

காய்ச்சல் வலிப்பு

காய்ச்சல் வலிப்பு என்பது குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல் ஏற்படும்போது ஏற்படுகிறது.அதற்கு முறையாக சிகிச்சையளிக்கவில்லையெனில், அது தீவிரமாகி, மூளையில் சேதம் அல்லது கை– கால் வலிப்பு நோயை ஏற்படுத்திவிடும்.எங்கள் மருத்துவமனை இந்த வலிப்பு சாதாரண காய்ச்சலால் மட்டுமே ஏற்பட்டதா என்பதை கவனிப்பதை மட்டுமே நோக்கமாகக்கொண்டுள்ளது.குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா எனவும் எங்களின் மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.குழந்தை நிபுணர்கள் இந்த வலிப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்கு சில பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.நாங்கள் சிறந்த மருந்துகளை வழங்குகிறோம்.இதை தடுப்பதற்கு நாங்கள் டையாசெப்பம் என்ற மருந்தை வழங்குகின்றோம்.

நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள்

மத்திய நரம்பு மண்டலத்தில் இயல்பான வளர்ச்சி இல்லாததாலும், வேறு ஏதேனும் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது, நரம்பியல் வளர்ச்சி கோளாறுகள் ஏற்படுகிறது. இது மூளையின் வளர்ச்சியை செயலிழக்கச்செய்து, நரம்பியல் சிக்கல்களால் ஏற்படும் உளவியல் பிரச்னைகளான கற்றல் குறைபாடு, தொடர்புகொள்வதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது. எங்களின் குழந்தை நரம்பியல் துறை முறையான நோய் கண்டறிதலில் கவனம் செலுத்தி, ஆட்டிசம், கற்றலில் குறைபாடு, அறிவு குறைபாடு போன்ற அனைத்து நரம்பியல் வளர்ச்சி கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கிறது. இந்த கோளாறுகளுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு நாங்கள் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம்.அதன் மூலம் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கிறோம்.இவற்றை கையாள்வதற்கு அறிவாற்றல் நடத்தை சிகிச்சை வழங்குகிறோம்.அது எங்களுக்கு மிக உதவிகரமாக உள்ளது.0

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை