பார்க்கின்சன்ஸ் நோய்கள் சிகிச்சை

பார்க்கின்சன்ஸ் நோய்கள் சிகிச்சை

பார்க்கின்சன்ஸ் நோய்கள் சிகிச்சை ( Parkison diseases)

பார்க்கின்சன்ஸ் நோய்கள் என்றால் என்ன?

மூட்டு அல்லது கைகள் அல்லது விரல்களில் நடுக்கம் ஏற்படுவது.கைகள் வேலை செய்யாமல் ஓய்வில்இருக்கும்போதும், நடுக்கம் ஏற்படும்.மனிதர்களுக்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி கோளாறால் பார்க்கின்சன்ஸ் நோய்கள் தோன்றி, ஒருவரின் கைகளின் இயக்கத்தையே பாதிக்கும்.முதலில் ஒரு கையில் சிறிய நடுக்கத்துடன் துவங்குவதே இதன் ஆரம்ப அறிகுறியாகும்.பின்னர் மெல்ல மெல்ல அதிகரித்து கைகளில் விறைப்பு தன்மையை ஏற்படுத்தி, இறுதியில், இயக்கத்தை மெதுவாக குறைத்துவிடும்.மிக முக்கியமாக, நோயின் ஆரம்ப காலத்தில், இது எவ்வித அறிகுறியையும் காட்டாது.ஆனால் நிலை மிக மோசமடைந்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகரித்து, இயக்குவது மற்றும் பேச்சில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

அடையாளத்திற்கான முக்கிய அறிகுறிகள்

பார்க்கின்சன்ஸ் நோயின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.பொதுவாகவே ஆரம்ப அறிகுறிகள் கவனிக்கப்படாமலே போய்விடும்.அறிகுறிகள் முதலில் உடலின் ஒருபுறத்தில் ஏற்படும்.இருபுறங்களும் பாதிக்கப்பட்ட பின்னரும் முதலில் ஏற்பட்ட ஒரு பக்கத்தின் நிலை மேலும் மோசமடையும்.பின்வருபவை பார்க்கின்சன்ஸ் நோயின் அறிகுறிகளாகும்.

 • உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் குறைத்தல், நாற்காலியில் இருந்து எழுவது, நடப்பது போன்ற சிறிய விஷயங்ககளை கூட மிகக்கடினமாக்குவது.
 • தசைகள் மிக இறுக்கமாகி, கடினமாகும். இதனால் வலி ஏற்படும். அசைவை குறைக்கும்.
 • பாதிக்கப்பட்ட நபர்கள் குனிந்த நிலைக்கு சென்றுவிடுவார்கள். இதனால் உடலை சமநிலைப்படுத்தி, இயக்குவதில் சிக்கல் ஏற்படும்.
 • தன்னிச்சையான இயக்கங்கள் நின்றுவிடும். புன்னகைப்பது, கண் சிமிட்டுவது, நடக்கும்போது கைகளை அசைப்பது உள்ளிட்ட மற்ற தன்னிச்சையான இயக்கங்கள் தடைபடும்.
 • பேச்சில் மாற்றம் ஏற்படும். பேசுவதில் சிரமம், மெதுவாக பேசுவது, உளறி பேசுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
 • எழுதுவதில் சிரமம் அல்லது எழுதும் வழிகளில் மாற்றங்கள் துவங்கும்.

பார்க்கின்சன்ஸ் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

ஒருவரின் உடலில் தொடர்ந்து வரும் இந்த கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்வது மிகமிக அவசியம்.ஏனெனில் அதுவே சிகிச்சை முறையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இது மூளையின் நரம்பு செல்கள் அல்லது நியூரான்கள் படிப்படியாக சிதைந்து அதன் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை இழப்பதால் ஏற்படுகிறது.பார்க்கின்சன்ஸ் கோளாறின் முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

 • மூளையில் உள்ள டோப்பமைனின் அளவு குறைவதே இது ஏற்படுவதற்கு முதன்மை காரணமாகும். மூளையின் சப்ஸ்டான்சியா பகுதியில் உள்ள டோப்பமினர்ஜிக் நியூரான் எனப்படும் டோப்பமைனை உருவாக்கும் செல்கள் இறப்பதால், மூளையிவ் டோப்பமைனின் அளவு குறைகிறது.
 • உளவியல் பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் சிலவகை மருந்துகளாலும் பார்க்கின்சன்ஸ் கோளாறு ஏற்படுகிறது. இது மருந்து உருவாக்கிய பார்க்கின்சன்ஸ் கோளாறு எனப்படும்.
 • மல்டிபில் சிஸ்டம் அட்ரோபி, ஹைட்ரோகெபாலஸ், சப்ராநியூக்ளியர் உள்ளிட்ட மூளையில் ஏற்படும் பல்வேறு நோய்களாலும் பார்க்கின்சன்ஸ் கோளாறு ஏற்படுகிறது.
 • வாஸ்குலர் பார்க்கின்சோநிசம், மூளைக்கு வழங்கப்படும் ரத்தத்தின் அளவில் தடை ஏற்படுவதால் உண்டாகும். இது வயதானவர்களில் குறிப்பாக நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் பொதுவான ஒன்றாகும்.
 • செரிப்ரோ வாஸ்குலர் பார்க்கின்சன்ஸ் முக்கியமான ஒன்றாகும். அது அடிப்படையாக தொடர் கால் அடிப்படையாக தொடர் கால்-கை வலிப்பை ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படுத்தும். இதனால் மூளையில் உள்ள பல்வேறு பாகங்கள் இறக்க நேரிடும்.
 • பார்க்கின்சன்ஸ் கோளாறு ஏற்படுத்துவதில் மரபணுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில மரபணு மாற்றங்கள் மற்றம் மாற்றங்கள் உடனடியாக இந்த நோய் தோன்றுவதற்கு காரணமாகின்றன.
 • மரபணுக்களை கடந்து, சில சுற்றுச்சூழல் பிரச்னைகள் அல்லது உரங்கள், மாங்கனீஸ் உள்ளிட்ட நச்சுக்களுடன் தொடர்பில் இருப்பதும் இந்த கோளாறு ஏற்படுவதற்கான காரணமாகின்றன.

நாங்கள் வழங்கும் சிகிச்சைகள்

பார்க்கின்சன்ஸ் கோளாறை முற்றிலும் குணமாக்க முடியாது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.எனவே அறிகுறிகளின் அடிப்படையில், நோயாளிகள் அதை கையாள்வதற்கு தேவையான சிகிச்சைகளை நாங்கள் வழங்குகிறோம்.எங்களின் திறமையான மருத்துவ நிபுணர்கள் குழு பாதிக்கப்பட்ட நோயாளிகளை சிறப்பாக கவனித்து, அவர்களுக்கு உதவுவார்கள்.நாங்கள் நோயாளிகளின் நிலைக்கு ஏற்ப சில மருந்துகளை பரிந்துரைக்கிறோம்.அதன் மூலம் அவர்கள் சூழ்நிலையை சமாளிக்க முடியும்.தீவிரமான நிலையில் எங்கள் மருத்துவர்கள், அறுவைசிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள்.அது குறிப்பிட்ட அளவு நோயாளிகளுக்கு உதவும்.உடற்பயிற்சி மற்றும் உடல் சார்ந்த இயக்கங்களை கொடுப்பதன் மூலம் நோயாளிகளின் நிலையை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம்.அது நோயாளிகளை நல்ல நிலையை அடைய உதவும்.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை