சேவைகள்

சேவைகள்

நரம்பியல் சிகிச்சைகள்

நரம்பியல் சிகிச்சை வசதிகள்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையின் சேவைகள் அனைத்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டவை. நரம்பியல் சிறப்பு சிகிச்சைக்கு மாநிலத்திலேயே உள்ள பெரிய மருத்துவமனைகளுள் டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையும் ஒன்று. எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் நாங்கள் புதிய மற்றும் நவீன சிகிச்சை முறைகளை வழங்கி வருகிறோம் என்று நம்பி வருகிறார்கள். அதை உண்மை என உணர்ந்து, குணமடைந்து திரும்பி செல்கிறார்கள். நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் மூளையை பாதிக்கும் அனைத்து நிலைகளுக்கும் வழங்கப்படும் கவனம், தண்டுவடம், புற நரம்பு மண்டலம் மற்றும் தசைகள் குறித்த அனைத்திற்கும் எங்களிடம் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு நரம்பியல் அறுவைசிகிச்சை, மூளைக்கட்டி அலகு, பக்கவாத அலகு, மூளை காயம் அலகு, நரம்பியல் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட எங்களின் சேவைகள் பரந்து விரிந்த ஒன்று. நரம்பியல் பயன்பாட்டிற்காக, மாவட்டத்திலேயே முதல்முறையாக எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி மற்றும் கேத் லேப் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பக்கவாத சேவைகள்

மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும்போது செல்கள் இறப்பதால் பக்கவாதம் ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைவதால் இஸ்கிமிக் பக்கவாதமும், ரத்தக்கசிவால் ரத்தக்கசிவு பக்கவாதமும் ஏற்படுகின்றன. இந்த பக்கவாத பிரச்னைகளில் இருந்து குணமடைவதற்கு நாங்கள் வழங்கும் சேவைகள்:

 • முதன்மை பக்கவாத தடுப்பு
 • பக்கவாத அவசர மேலாண்மை
 • பக்கவாதத்திற்கு முன்னதான மேலாண்மை
 • பக்கவாத மறுவாழ்வு மற்றும் இயன்முறை சிகிச்சைகள்
 • பக்கவாதம் ஏற்பட்ட 6 மணி நேரத்திற்குள் உள் தமனி திரோம்போலிசிஸ்
 • rT-PAவைப்பயன்படுத்தி உள்சிரை திரோம்போலிடிக் சிகிச்சை மற்றும் 6 முதல் 9 மணி நேரத்திற்குள் மற்ற திரோம்போலிடிக் சிகிச்சை.
 • பிரிட்ஜிங் சிகிச்சை (பிளாஸ்மா பரிமாற்றம் மற்றும் ஐவிஐஜி

பக்கவாதத்தில் இறப்பு விகிதம் குறைவு. இதை எதிர்த்து போராடுவதற்கு, நோயாளிக்கு அதீத கவனம் தேவைப்படுகிறது. நோய் தன்மை மற்றும் இறப்பு விகிதம் குறைப்பதற்கும், சிக்கலான சில நியூரோவாஸ்குலர் பிரச்னைகளுக்கும், நியூரோஇன்டர்வென்ஷனல் முறைகள் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இணையற்ற எங்களின் மருத்துவ சேவைகள், மாநிலத்திலே குறைந்த அளவிலான மருத்துவமனைகளிலேயே வழங்கப்படுகிறது. அதில், டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை சிறந்த சேவையை வழங்குகிறது.

இன்டர்வென்ஷனல் நியூராலஜி மற்றும் கதிரியக்க சேவைகள்

நீண்ட கால அனுபவமுள்ள மற்றும் போட்டியிட முடியாத அளவிற்கு திறமையான மருத்துவர்கள், பல்வேறு நோய்களுக்கான நியூரோஇன்டர்வென்ஷனல் சிகிச்சையில் நிபுணத்துவத்தை வெளிக்காட்டியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்கு மேலும் உதவும் வகையில் எங்களிடம் உள்ள வசதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

 • நியூரோவாஸ்குலர் கேத் லேப்.
 • இன்டர்வென்ஷனல் நியூராலஜி சிகிச்சை செய்வதில் பயிற்சி பெற்ற நரம்பியல் நிபுணர்கள்.

கை-கால் வலிப்பு(காக்கா வலிப்பு) சேவைகள்

கை-கால் வலிப்பு(காக்கா வலிப்பு) குறைவான நேரம் முதல் நீண்ட நேரம் வரையிலான வலிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த நோயை எதிர்கொள்வதற்கு நாங்கள் பல சேவைகளை வழங்கி வருகிறோம்.

 • ஆலோசனை
 • நோய் குறித்த அறிவு அளித்தல்
 • ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி சிகிச்சை முறை

பெண்களுக்கான நரம்பியல் சேவைகள்

பெண்களில் நரம்பியல் நோய்கள் மற்றும் அதை கையாள்வதில் சிறப்பு கவனம் தேவை. அவர்களின் மாதவிடாய், கர்ப்ப காலங்கள், குடும்ப கட்டுப்பாடு மற்றும் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற அனைத்தையும், பெண்களுக்கு ஏற்கனவே நரம்பு பாதிப்பு இருந்தால், கையாள்வது மிகக்கடினம். எனவே அதற்காக பெண்களுக்கு தனிக்கவனம் செலுத்தும் சிசிச்சை வசதி தேவை. தலைவலி, வலிப்பு கோளாறுகள் மற்றும் பக்கவாதம் பாதித்த பெண்களுக்கு கர்ப்ப காலம், பேறு காலம், பாலூடும்போது மற்றும் குடும்ப கட்டுப்பாடு போன்றவற்றை அவர்களுக்கு எளிதாக போதிய உதவியை செய்கிறோம்.

இயக்க கோளாறு சேவைகள்

 • பார்க்கின்சன்ஸ் கோளாறுகளுக்கான சிகிச்சைகள்
 • போடாக்ஸ் சிகிச்சை

தண்டுவட மரப்பு நோய் மற்றும் டிமைலினேசன் கோளாறுகள்

 • இன்டர்ப்ரான் மற்றும் கிளாட்டிராமெர் கொடுப்பதில் நிபுணத்துவம்
 • குல்லியன் பர்ரே அறிகுறியை குணப்படுத்த பிளாஸ்மாபெரிசிஸ்

சில மற்ற சேவைகள்

 • மனச்சோர்வு
 • பெருமூளை வாதம்
 • அறிவு குறைபாடு
 • ஆட்டிசக் குறைபாடு
 • கழுத்துப்பகுதி வட்டு இறக்கம்

எங்களின் கேத் லேபை, இதய நோய் நிபுணர்கள் ஸ்டென்டிங், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக பயன்படுத்துகிறார்கள்.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம், நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை