பக்கவாத சேவைகள்

பக்கவாத சேவைகள்

பக்கவாத மீட்பு சிகிச்சைகள் (Stroke Recovery Treatment)

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் வழங்கப்படும் பக்கவாத மீட்பு சிகிச்சைகள், பக்கவாதம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுகிறது. டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

1. முதல்நிலை பக்கவாத தடுப்பு நடவடிக்கை

முதல் நிலை பக்கவாத தடுப்பு நடவடிக்கை என்பது பக்கவாதத்தால் ஏற்கனவே பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.முதல் நிலை பக்கவாதத்தை தடுக்க சில ஆபத்து குறைப்பு நடவடிக்கைகள் உள்ளன.அவை எதிர்விளைவுகள் மற்றும் எதிர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய மருத்துகளை உட்கொள்வதால் ஏற்படுகிறது.புகைப்பிடித்தலை நிறுத்துவது, பொட்டாசியம் அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்வது, அதிக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது, உடல் எடையை குறைப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளலாம். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சர்க்கரையின் அளவை கண்காணிக்க வேண்டும்.ரத்த அழுத்தத்தையும் கண்காணித்து வரவேண்டும்.

2. பக்கவாதத்தில் அவசர மேலாண்மை

  • ஐவி திரோம்போலிசிஸ்

உறைந்த ரத்த கட்டிகளை வெடிக்க செய்யக்கூடிய திரோம்போலிசிஸ் மருந்துகள் புற நரம்புகளில் ஐவி மூலம் கைகளில் உள்ள வெளியில் தெரியக்கூடிய நரம்புகள் வழியாக செலுத்தப்படும். அதிகளவில் உறைந்த ரத்த கட்டிகளை வெடிக்க வைக்க திசு ப்ளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர் (டிபிஏ) என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.பக்கவதாம் ஏற்பட்ட 3 முதல் 24 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும்.ரத்த நாள அடைப்பு M1க்கு மேலும், MCA பிரிவு மற்றும் பின்புற சுழற்சியும், 75 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.சிகிச்சைக்கும் பின்னர் நோயாளியின் வெளித்தோற்றம் வியக்கத்தக்கும் அளவிற்கு மாறும்.

  • ஐஏ திரோம்போலிசிஸ்(IAT)

ஐஏ திரோம்போலிசிஸ் முறை டிபிஏயுடன் கூடுதலாக கொடுக்கப்படும்.அல்லது டிபிஏ ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்ட குறிப்பிட்ட நேரத்தை கடந்தாலோ அல்லது குறிப்பிட்ட சர்வதேச வழக்கமான நேரத்திற்கு எதிராக மருந்து உபயோகத்திற்கு எதிரான அறிகுறிகள் இருந்தாலோ இந்த சிகிச்சை வழங்கப்படும். ரத்தம் உறைந்துள்ள இடத்தில் சிறிய குழாய் மூலம் டிபிஏ மருந்து வழங்கப்படும்.மருந்து உங்கள் உடல் முழுவதும் பரவாது.நடு பெருமூளை அல்லது கரோடிட் தமனி மற்றும் பேசிலரில் பிரச்னை உள்ளவர்களுக்கு உதவக்கூடியது ஐஏடி சிகிச்சை.

  • மெக்கானிக்கல் திரோம்போலிசிஸ்

தமனிகளில் ரத்தம் பெரியளவில் உறைந்திருப்பதை டிபிஏவால் வேகமாக செயல்பட்டு கரைக்க முடியாது. மெக்கானிக்கல் சிகிச்சையில் குழாய்களை நேரடியாக திரோம்போயம்போலஸ் மூலமாக உறைந்த ரத்தகட்டிகள் மீது  ரத்த உறைவை ஊடருக்கும் அல்லது மீட்கும் கருவியை செலுத்துவது மெக்கானிக்கல் திரோம்போலிசிஸ் என்றழைக்கப்படுகிறது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கருவிகள் ரத்த உறைவை அப்படியே இழுத்து எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.அவை சில நிமிடங்களில் உறைந்த ரத்தக்கட்டிகளை நீக்கிவிடும்.இதை பக்கவாதம் பாதித்த 24 மணிநேரத்திற்குள் செய்யவேண்டும்.தற்போது பக்கவாதத்திற்கு செய்யபடும் சிறந்த சிகிச்சைகளுள் ஒன்றாகும்.

  • மூளையின் உள்ளே ரத்தக்கசிவால் ஏற்படும் பக்கவாதத்திற்கு குறைந்தளவு சிகிச்சையே வழங்க முடியும். அதில் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இறப்பு நடக்கிறது. ரத்தக்கட்டு வளர்வதை தடுக்க மறுசீரமைக்கப்பட்ட செயலூக்கி காரணிகள் VII என்பது வழங்கப்படுகிறது. அது வாழ்விற்கு உத்ரவாதமளிக்காது.

3. பக்கவாத மேலாண்மை குழு

ரத்த நாளங்களில் பெரிய பிரச்னைகளோடு வரும் நோயாளிகளை சமாளிப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ள பக்கவாத சிகிச்சைமையமும், கடின உழைப்பும், அனுபவமும் தேவைப்படுகிறது. அதில் நரம்பியல் மருத்துவர்கள், பக்கவாத சிகிச்சை நிபுணர்கள், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், பக்கவாத சிகிச்சையளிக்கு செவிலியர்கள், பிசியோதெரப்பிஸ்ட் மருத்துவர்கள் மற்றும் சுவாச நிபுணர்கள் என்ற அனைவரின் ஒத்துழைப்பும், உதவியும் தேவைப்படும்.

4. பக்கவாத மறுவாழ்வு மற்றும் பிசியோதெரபி எனப்படும் இயன்முறை சிகிச்சைகள்

பக்கவாத மறுவாழ்வில், பிசியோதெரபி மற்றும் செயற்கை சுவாச கருவிகள் மூலம் வழங்கப்படும் சுவாச சிகிச்சைகள் ஆகியவை மிக முக்கிய பகுதிகளாகும்.எங்களிடம் அனுபவமுள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் சுவாச சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.அவர்கள் மருத்துவர்களுடன் சேர்ந்து பணியாற்றி நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையளிக்க உதவுவார்கள்.நோயாளியின் ஆரம்ப ஈடுபாடு மற்றும் மதிப்பீடு பிசியோதெரபிஸ்ட்களால் செய்ய முடியும்.ஆரம்பத்திலேயே இயக்கங்களை துவங்கிவிடுவது, நோயாளிகள் சிறந்த முறையில் குணமடைய வழிவகுக்கும்.கடுமையான பராமரிப்பு பிரிவிலோ அல்லது மற்ற வார்டிலோ மறுவாழ்வு நோயாளிகள் தங்கவைக்கப்படுவார்கள்.ஆனால் எங்கு இருந்தாலும், தடையற்ற சிறப்பு கவனம் நோயாளிகள் மேல் செலுத்தப்படும்.நோயாளிகளின் தேவையே அவர்களுக்கு எவ்வளவு தீவிரமான சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

மறுவாழ்வின் இலக்குகள்

1. மூளைப்பகுதி இயங்காமல் இருப்பதை குறைப்பது

2. அதன் திறகன்களை அதிகரிப்பது

3. சிக்கல்களை தடுப்பது

மறுவாழ்வில் இரண்டு கூறுகள் உள்ளன.உடல் ஒருமைப்பாட்டை பாராமரிப்பது முதல் இலக்காகும்.சிக்கல்களை குறைப்பதன் மூலம் மீண்டும் ஏற்படாமல் தடுப்பது பக்கவாதம் ஏற்பட்ட உடனே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இரண்டாவது மறு சீரமைப்பு சிகிச்சைகள்.இது இயக்கங்கள் சீராவதை ஊக்குவிக்கும்.நரம்பியலாகவும், மருத்துவ ரீதியாகவும் ஒரு நோயாளி சீரான நிலையில் இருக்கும்போது இந்த சிகிச்சைகள் தொடங்கும்.அதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நோயாளி மறுவாழ்வு திட்டங்களில் சுறுசுறுப்பாக பங்குகொள்வதும் அவசியம்.பக்கவாத சிகிச்சை மேலாண்மை என்பது கடுமையான பராமரிப்பு மையத்தில் துவங்கி, மறுவாழ்வு சிகிச்சை வரை தொடர்கிறது.அதற்கு நோயாளி உடல் மருத்துவ ரீதியாகவும், நரம்பியல் ரீதியாகவும் சீராக இருக்க வேண்டும்.சமுதாய பராமரிப்பு நிலையில் நோயாளியை சுற்றியுள்ள சமூகமும் அவர்களுக்கு உதவவேண்டும்.

இதை எழுதியவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம் – நரம்பியல் நிபுணர், தஞ்சாவூர்

டாக்டரை கேளுங்கள்

எங்களின் செய்திகளை பெறுவதற்கு

எங்களை தொடர்பு கொள்ளவும்

டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை

எண்.7 கே.எஸ்.நகர், புதுக்கோட்டை சாலை

புதிய பேருந்து நிலையம் எதிரில்,

தஞ்சாவூர்,

தமிழ்நாடு, இந்தியா - 613005.

தொலைபேசி எண் : 04362 – 226297, 226733

விசாரணை